செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / கோவில்கள் / இந்து / சுயம்புலிங்க சுவாமி கோயில், உவரி

சுயம்புலிங்க சுவாமி கோயில், உவரி

உவரி சுயம்புலிங்க சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டம் உவரியிலுள்ள சிவன் கோயில். முதன்மைக் கடவுளான சிவன் இங்கு சுயம்புமூர்த்தியாக லிங்கவடிவில் உள்ளதால் இப்பெயர் வழங்கப்படுகிறது.

இக்கோயில் திருச்செந்தூர்-கன்னியாகுமரி ([[மாநில நெடுஞ்சாலை 176 (தமிழ்நாடு|எஸ்.எச்-176) சாலையில் உள்ளது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 40 கி.மீ தொலைவிலும் தூத்துக்குடியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும்., கன்னியாகுமரியிலிருந்து சுமார் 52 கி.மீ தொலைவிலும், திருநெல்வேலியிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. காலை 6-11 மணி வரையும் 4-8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

அஞ்சல் முகவரி: அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், உவரி – 628 658, திருநெல்வேலி மாவட்டம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் : திருச்செந்தூர், கன்னியாகுரி

அருகிலுள்ள விமான நிலையம் : திருவனந்தபுரம், மதுரை

கோயிலின் நுழைவாயிலினைக் கடந்து உள்ளே மூலஸ்தானத்திற்குச் சென்றால் அங்கே சுயம்புலிங்கசுவாமியைக் காணலாம். கோயிலின் வெளிப்புறம் வலது புறத்தில் கன்னிவிநாயகருக்கான தனிக் கோயில் உள்ளது. சிவன் கோயிலுக்கு இடப்புறமாக பிரம்மசக்தி அம்மன் சன்னதி உள்ளது. இச்சன்னதியில் முன்னடி சாமி உள்ளது. அதற்கடுத்தபடியாக பேச்சியம்மன் சன்னதி உள்ளது. பேச்சியம்மன் சன்னதியில் பேச்சியம்மன், மாடசாமி, இசக்கியம்மன் ஆகிய தெய்வங்களைக் காணமுடியும்.

About ragavan

Check Also

நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த வாலிபர் சாவு

நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட போலீஸ் நிலையத்துக்கு வி‌ஷம் குடித்து வந்த வாலிபர் சாவு   திசையன்விளை, நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன