செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / திசையன்விளை அருகே பரிதாபம் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திசையன்விளை அருகே பரிதாபம் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

திசையன்விளை,

கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கணவரை பிரிந்து…

நெல்லை மாவட்டம் திசையன்விளை விஸ்வகர்மா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆசாரி. இவருடைய மகள் பார்வதி(வயது30). இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது.

இத்தம்பதியருக்கு 4½ வயதில் சுவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சினை முற்றியதில், கணவர் வீட்டிலிருந்து குழந்தையுடன் வெளியேறிய பார்வதி, கடந்த 4½ ஆண்டுகளாக திசையன்விளையில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.

தீக்குளித்து சாவு

ரஞ்சித்குமார் திருப்பூரில் வசித்து வருகிறார். அவர், தூத்துக்குடிக்கு வரும்போது கூட மனைவி, குழந்தையை பார்க்க வருவதில்லையாம். கடந்த 4½ ஆண்டுகளாக மனைவியுடன் போனில் கூட பேசாமல் அவர் இருந்தாராம். இதனால், பார்வதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.

வாழ்க்கையில் வெறுப்படைந்த பார்வதி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டுள்ளார். அவருடைய அலறல் சப்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று காப்பாற்ற முயற்சித்துள்ளனர். தீயை அணைத்த போதிலும், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

உதவி கலெக்டர் விசாரணை

அவருடைய உடலைப் பார்த்து பெண் குழந்தையும், குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து பார்வதியின் அண்ணன் இசக்கிமுத்து திசையன்விளை போலீசாரிடம் புகார் செய்தார். சம்பவ இடத்துக்குச் சென்று வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி விசாரணை நடத்தினார். பார்வதி தற்கொலை தொடர்பாக சேரன்மாதேவி உதவி கலெக்டர் விஷ்ணு விசாரணை நடத்தி வருகிறார்.

நன்றி : தினத்தந்தி

 

About Eesu

Check Also

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை: சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவர் வலியுறுத்தல்

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என்றார் சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுத் தலைவரும், ராதாபுரம் சட்டப்பேரவைத் …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன