நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே காதல் தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆணவ கொலையா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தீவிரமாக தேடும் பணி நடைபெற்று வருகிறது.
ஹைலைட்ஸ்:
- நெல்லையில் பயங்கர சம்பவம்
- காதல் தகராறில் இளைஞர் கொலை
- ஆணவக்கொலையா என விசாரணை
- தனிப்படை அமைத்து தேடுதல்வேட்டை
காதல் விவகாரம்
இருவரும் வெவ்வேறு சமூகத்தினர் என்பதாலும் குறிப்பாக இளைஞர் முத்தையா அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர் என்பதாலும் சுதாவின் வீட்டில் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஆனாலும், எதிர்ப்பை மீறி முத்தையாவின் வீட்டிற்கு சென்று அவரை சுதா நேரில் சந்தித்துள்ளார். பின்னர் மாலையில் முத்தையா தனது இருசக்கர வாகனத்தில் சுதாவை இட்ட மொழியில் கொண்டு விட்டு விட்டு தனது வீட்டிற்கு திரும்பி உள்ளார்.
பின்னர் இரவு செல்போனில் பேசிக் கொண்டே தனது நண்பரை பார்த்து விட்டு வருவதாக வீட்டில் சொல்லிவிட்டு வெளியே சென்ற முத்தையா இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து முத்தையாவின் சகோதரர்கள் தங்களது வீட்டிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதிகளில் தேடிப்பார்த்துள்ளனர்.
போலீஸ் தீவிர விசாரணை
அப்போது, காரம்பாடு ஓடை பகுதியின் ஓரத்தில் முத்தையா கழுத்து வயிறு மற்றும் முதுகு பகுதிகளில் கத்திக்குத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து சம்பவம் அறிந்த திசையன்விளை காவல்துறையினர் முத்தையாவின் உடலை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆணவக்கொலையா?
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களின் காதலால் ஏற்பட்ட தகராறில் கொலை நடைபெற்றதா என்ற கோணத்திலும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை இளைஞர் வீட்டிற்கு பெண் வந்து சென்ற நிலையில் இந்த கொலை சம்பவம் நடந்தது காரணமாக பெண் வீட்டாரை இந்த சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் இது ஆணவக் கொலையாக இருக்கும் என்றும் காவல்துறையின் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசனிடம் கேட்டபோது, விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணையின் முடிவிலேயே கொலைக்கான காரணம் தெரியவரும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காதல் காரணமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் திசையன்விளை சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி : THE TIMES OF INDIA Samayam Tamilhttps://tamil.samayam.com/latest-news/tirunelveli/honour-killing-in-nellai-thisayanvilai-youth-killed-by-love-issue-police-investigation/articleshow/102073985.cms