செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / பதிவுகள் / மணல் கடத்தலை அம்பலப்படுத்தியதால் எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் வாசலில் விஷம் குடித்த வாலிபர் சாவு

மணல் கடத்தலை அம்பலப்படுத்தியதால் எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் வாசலில் விஷம் குடித்த வாலிபர் சாவு

திசையன்விளை: திசையன்விளையில் மணல் கடத்தல் விவகாரத்தை அம்பலப்படுத்திய வாலிபர், எஸ்ஐ தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தையான அதிமுக பிரமுகர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்(65). அதிமுக முன்னாள் நகர செயலாளர். இவரது மகன் ஜெனிபர்(33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். ஜெனிபர் மீது கடந்த 3ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர், திசையன்விளை போலீசில் புகார் அளித்தார். அதில், ‘‘ஜெனிபர் போலீஸ் என்று கூறி தன்னை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாகவும், கொடுக்க மறுத்ததால் தாக்கியதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக திசையன்விளை எஸ்ஐ மகேந்திரன், ஜெனிபரை கைது செய்தார். பின்னர் ஜெனிபர் கோர்ட்டில் நிபந்தனை ஜாமீன் பெற்று தினமும் திசையன்விளை போலீசில் கையெழுத்திட்டு வந்தார்.

கடந்த 14ம் தேதி கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த ஜெனிபர், தான் கொண்டு வந்த விஷத்தை குடித்துவிட்டு காவல் நிலைய வாசலில் மயங்கினார். அவரை போலீசார் மீட்டு, அப்பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஜெனிபர் நேற்று முன்தினம் இறந்தார். இதனிடையே ஜெனிபரின் தந்தை ஜெயபால், நெல்லை சரக டிஐஜி கபில்குமார் சரத்கரிடம் அளித்த மனுவில் எனது மகன் நம்பியாற்றில் மணல் திருட்டுக்கு திசையன்விளை போலீசார் உடந்தையாக இருப்பது குறித்து் உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் திசையன்விளை எஸ்ஐ, கடந்த 9ம் தேதி பொய் வழக்கு பதிந்து கைது செய்தார். மேலும் அவரை காவல்நிலையத்தில் துன்புறுத்தி நிர்வாண படம் எடுத்துமிரட்டியதால் என் மகன் விஷம் குடித்து இறந்துவிட்டான். எனவே திசையன்விளை எஸ்ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

நன்றி : தினகரன்

About Eesu

Check Also

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு

தாமிரவருணி வெள்ளநீர் கால்வாயின் 3-ஆம் கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன