தாது மணல் ஏற்றுமதி செய்யும் நிறுவனமான விவி மினரல்ஸ்ட் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
நன்றி : Cauvery News