நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, நூற்பாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல தொழில்களை நடத்தி வருகிறது.
வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை 6 நாட்களாக நடத்திய சோதனையில், 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாகக் கொண்டு வி.வி மினரல்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.
கடற்கரை தாது மணலிலிருந்து தாதுக்களை பிரித்தெடுத்து ஏற்றுமதி செய்து வரும் வி.வி மினரல்ஸ், நூற்பாலைகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறது.
ஏற்றுமதி மூலம் முறைகேடாக சாம்பதித்த பணத்தை வெளிநாடுகளில் சட்டவிரோதமாக முதலீடு செய்ததாக வந்த புகாரின் பேரில், வருமான வரித்துறையினர், வி.வி மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் கடந்த 6 நாட்களாக சோதனை நடத்தினர்.
சோதனை நிறைவடைந்த நிலையில், வி.வி மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சோதனையில்போது கணக்கில் வராத 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், வெளிநாடுகளில் 8 சுரங்கங்களை நடத்தியது தெரியவந்துள்ளதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆயிரத்து 800 கோடி ரூபாய் வருவாயை மறைத்ததையும், போலி நிறுவனங்கள் மூலம் பல நாடுகளில் கோடிக்கணக்கில் பணப்பரிவர்த்தனை நடந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ஆர்.கே.நகரில் தேர்தல் செலவுக்காக வேட்பாளர் ஒருவருக்கு வைகுண்டராஜன் இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் வருமான வரித்துறை கூறியுள்ளது.
வைகுண்டராஜன், அவரது சகோதரர் ஜெகதீசன் மற்றும் அவரது மகன்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
நன்றி : News 18 Tamil