செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / வைகுண்டராஜன் 800 கோடி வரி ஏய்ப்பா..?

வைகுண்டராஜன் 800 கோடி வரி ஏய்ப்பா..?

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான வி.வி.மினரல்ஸ் நிறுனவத்தில் இருந்து, கணக்கில் காட்டாத 8 கோடி ரூபாயை வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தொழிலதிபர் வைகுண்டராஜனுக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட இடங்களில், கடந்த 25ஆம் தேதி முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வெளிநாட்டு நிறுவனங்களில் முறைகேடாக முதலீடு செய்திருப்பது, வரி ஏய்ப்பு செய்திருப்பது உள்ளிட்ட புகார்களின்கீழ் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.

இதில் திசையன்விளை, சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தில் இருந்து 8 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் தொழிலதிபர் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கும் மேல் வரி ஏய்ப்பு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி  : Cauvery News

About Eesu

Check Also

வைகுண்டராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக ரெய்டு: ஏராளமான ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: வைகுண்ட ராஜனுக்கு சொந்தமான இடங்களில் 5வது நாளாக நேற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன