திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவை முன்னிட்டு, நேற்று மஞ்சள்பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். மஞ்சள்பெட்டி ஊர்வலம் திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கடந்த 23–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள், கோலப் போட்டிகள், சமய சொற்பொழிவு, பல்சுவை கலை போட்டிகள், இன்னிசை கச்சேரி, நாடகம், மாங்கல்ய பூஜை, குத்துவிளக்கு …
Read More »Monthly Archives: ஆவணி 2015
களக்காடு அருகே பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட அடிக்கல் நாட்டு விழா
களக்காடு அருகே உள்ள பெருமாள்குளம் டி.டி.டி.ஏ நடுநிலைப்பள்ளியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பெருமாள்குளம் சேகரகுரு சாமுவேல் பீட்டர் தலைமை வகித்தார். பஞ்சாயத்து தலைவர் மாணிக்கம், தலைமை ஆசிரியர் மனுவேல் முன்னிலை வகித்தனர். நல்லாசிரியர் செல்வராஜ் வரவேற்றார்.மனோஜ்பாண்டியன் எம்.பி அடிக்கல் நாட்டி பேசுகையில், ‘கடந்த 6 ஆண்டுகளில் 40 பள்ளிகளுக்கு கட்டிடங்கள் கட்ட ரூ.5 கோடி ஒதுக்கீடு …
Read More »திசையன்விளையில் போலி சிம்கார்டுகள் புழக்கம் அதிகரிப்பு
சைபர் கிரைம் போலீசாருக்கு சவால் திசையன்விளையில் போலி சிம் கார்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளதால் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்மூலம் மாணவிகள், குடும்ப பெண்கள், சமூகத்தின் முக்கியஸ்தர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. நெல்லை மாவட்டத்தில் சமீபகாலமாக போலி சிம்கார்டுகள் புழக்கம் அதிகரித்துள்ளது. பிரபல நிறுவனங்கள் தங்களது விற்பனை பிரதிநிதிகளுக்கு சிம் கார்டுகள் விற்பதற்கு இலக்கு நிர்ணயிக்கின்றனர். இதற்காக கவர்ச்சிகரமான பரிசுகளும், …
Read More »திசையன்விளையில் பி.எஸ்.என்.எல். சார்பில் மறு இணைப்பு மேளா
திசையன்விளை பி.எஸ்.என்.எல். தொலைபேசி நிலையத்தில் 12–ந் தேதி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தரைவழி இணைப்புகள் பெற்று துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ள வாடிக்கையாளர்களுக்காக, மறு இணைப்பு மேளா வரும் 3–ந்தேதி தொடங்கி, 19–ந் தேதி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் ப.முருகானந்தம் விடுத்துள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:– மறு இணைப்பு மேளா பி.எஸ்.என்.எல். தரைவழி இணைப்புகளில் இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை …
Read More »திசையன்விளை கோயில் கொடை விழாவில் மாணவ, மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் போட்டி
திசையன்விளை, : திசையன்விளை வடக்கு தெரு சுடலை ஆண்டவர் கோயில் கொடை விழாவில் நேற்று மாணவ, மாணவிகளுக்கான கம்ப்யூட்டர் போட்டி நடந்தது. கொடை விழாவின் 4ம் நாள் விழாவான நேற்று காலை சீவலப்பேரியில் இருந்து கொண்டு வந்த புனித நீரில் கும்பாபிஷேகம் நடந்தது. சமய சொற்பொழிவு, சுவாமிக்கு மாக்காப்பு பூஜையும், தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடந்தது. நேற்று காலை மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி, கம்ப்யூட்டர் போட்டியும், தொடர்ந்து வில்லிசை …
Read More »கோலாகலமாக தொடங்கியது திசையன்விளை சுடலை ஆண்டவர் கொடைவிழா
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா கோலாகலமாக தொடங்கியது. சுடலை ஆண்டவர் கோவில் கொடைவிழா ஆண்டு தோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும். தற்போது கொடைவிழா தொடங்கியதையடுத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதனையடுத்து விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கோலப் போட்டிகள் நடைபெற்றன. விழா தொடர்ந்து இம்மாதம் 28 ம் தேதி வரை நடைபெறுகிறது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நன்றி: நியூஸ் 7
Read More »முன்பக்கம் உடைந்து தாறுமாறாக ஓடிய பஸ்.. டிரைவர் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்
திசையன்விளை: அரசுப் பேருந்தின் முன்பக்க மெயின் பட்டை உடைந்து தாறுமாறாக ஓடிய அரசு பஸ்சில் பயணித்த ஸ்ரீவைகுண்டம் பகுதி பயணிகள் பஸ் டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்துள்ளனர். திருநெல்வேலி அரசு போக்குவரத்துக்கழக பணிமணையின் சார்பில் திருநெல்வேலியில் இருந்து சாத்தான்குளத்திற்கு தடம் எண் 264 என்ற அரசு பஸ்(வண்டி எண் டி.என்.72 என் 1222) நாள்தோறும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் திருநெல்வேலி புதிய பஸ் நிலையத்தில் விஜயநாராயணம் வழியாக உவரி …
Read More »திசையன்விளை பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
திசையன்விளை ஸ்ரீராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளியில் 22 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.எஸ்.எல்.சி பயின்ற மாணவ, மாணவிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கடந்த 1992-93ம் ஆண்டு பயின்ற மாணவ, மாணவிகள் 57 பேர், அவர்களுக்கு பயிற்றுவித்த 14 ஆசிரியர்கள், தற்போதைய ஆசிரியர்கள் 40 பேர் மற்றும் பள்ளி ஊழியர்கள் குடும்பத்துடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். சுதந்திர தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் மாணவ, மாணவிகளுக்கு லட்டு வழங்கினர். தொடர்ந்து …
Read More »பைக் மீது வேன் மோதி 2 தலையாரிகள் பலி -திசையன்விளை
கூடங்குளம் அருகே பைக் மீது வேன் மோதியதில் 2 தலையாரிகள் உடல் நசுங்கி பலியாகினர். நெல்லை மாவட்டம் உவரியை சேர்ந்தவர் அருள்லிங்கம் (48). இவர் கூடங்குளத்தில் தலையாரியாக வேலை பார்த்து வந்தார். இவரும், செட்டிகுளத்தில் தலையாரியாக பணிபுரியும் திசையன்விளை அருகே புலிமான்குளத்தை சேர்ந்த வேல் என்பவரும் நேற்று காலை பைக்கில் உவரியில் இருந்து கூடங்குளத்திற்கு கடற்கரை சாலை வழியாக சென்றனர். கூடங்குளம் அருகே சென்ற போது மின்னல் வேகத்தில் பின்னால் …
Read More »திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா 23–ந் தேதி தொடங்குகிறது
திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழா வருகிற 23–ந் தேதி தொடங்குகிறது. சுடலை ஆண்டவர் கோவில் தென்தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சுடலை ஆண்டவர் கோவில்களில் ஒன்றாக திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் விளங்கி வருகிறது. அந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா வருகிற 23–ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் காலை 8 …
Read More »