செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / 2016 / மாசி

Monthly Archives: மாசி 2016

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செலாளர் இன்பதுரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர ஜெயலலிதா பேரவை ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. …

Read More »

பக்தர்களைக் காக்கும் பாலா திரிபுரசுந்தரி : கொம்மடிக்கோட்டை

அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பணகுடி, கடையநல்லூர், வள்ளியூர், களக்காடு, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி மற்றும் திசையன்விளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழ்கண்ட ஊர்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது. நாளை விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலார், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, …

Read More »

திசையன்விளையில் தேசிய அளவிலான கபடி போட்டி: சென்னை அணிக்கு கோப்பை பரிசு

திசையன்விளையில் நடந்த தேசிய அளவிலான மின்னொளி கபடி போட்டி ஆண்கள் பிரிவில் சென்னை அணிக்கு கோப்பை பரிசு வழங்கப்பட்டது. மின்னொளி கபடி போட்டி முதல்–அமைச்சர் ஜெயலலிதா 68–வது பிறந்த நாளையொட்டி, நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி சார்பில் திசையன்விளையை அடுத்த அப்புவிளை வி.எஸ்.ஆர். விளையாட்டு மைதானத்தில் தேசிய அளவிலான ஆண், பெண்கள் மின்னொளி கபடி போட்டி 3 நாட்கள் நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் 20 அணிகளும், பெண்கள் …

Read More »