திங்கள் , கார்த்திகை 4 2024
Breaking News

Monthly Archives: சித்திரை 2016

மனதை செம்மையாக்கும் மனோன்மணீஸ்வரர் : விஜயநாராயணம்

விஜயநாரயணம் மனோன்மணீஸ்வர் ஆலயம் பஞ்ச கயிலாயத்தில் கடைசி க்ஷேத்ரமாக போற்றப்படுகிறது. கயிலையில் பார்வதி தேவி உலக நலத்திற்காகச் சிவபெருமானைத் தியானித்தார். தனது கையில் வைத்திருந்த 1008 தாமரைப் புஷ்பங்களை பூமியில் தூவினாள். அந்த புஷ்பங்களைச் சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடங்களெல்லாம் 1008 சிவக்ஷேத்ரங்களாக போற்றப்படுகின்றன. இதில் 74வது க்ஷேத்ரமாக மனோன்மணி என்னும் லிங்கம் அமைந்த விஜயநாராயணம் போற்றப்படுகிறது. …

Read More »

திசையன்விளையில் இளம்பெண் மாயம்

திசையன்விளை அருகே இளம்பெண் மாயமானார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  திசையன்விளை அருகே உள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகள் பவானி(20). இவர் கடந்த 26ம் தேதி திசையன்விளையில் உள்ள பெரியம்மா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்ற பவானி பின்னர் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாயார் கலாராணி திசையன்விளை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன் …

Read More »

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது லாரி, ஜேசிபி பறிமுதல்

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், எஸ்.ஐ.மதிபாலன் மற்றும் போலீசார் நம்பியாற்றில் திடீர் சோதனை நடத்தினர். இதில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட அணைக்கரையை சேர்ந்த எட்வின்(29), …

Read More »

சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் 1,100 மாணவர்களுக்கு பட்டமளிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற விழாவில், உறுப்புக் கல்லூரி மாணவர்கள் 1,100 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. இப் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரிகளான திசையன்விளை, சேரன்மகாதேவி, புளியங்குடி, சங்கரன்கோவில், நாகபட்டி மற்றும் கடையநல்லூர், கன்னியாகுமரி, சாத்தான்குளம், நாகலாபுரம் உறுப்புக் கல்லூரிகளில் பயின்ற மாணவர், மாணவிகளுக்கு பட்டம் வழங்கும் விழா நடைபெற்றது. பல்கலைக் கழக துணை வேந்தர் கி. பாஸ்கர், மாணவர்களுக்கு பட்டம் வழங்கிப் பாராட்டினார். உறுப்புக் கல்லூரி …

Read More »

தோல்வி பயத்தில் ஜாதி கலவரத்தை தூண்ட வைகோ சதி

காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேர்தலில் போட்டியிடாதது அவரது சொந்த விருப்பம். ஆனால் ஜாதி ரீதியாக அவர் சொல்லியிருக்கும் காரணம், தமிழக தேர்தல் அரசியலை சற்று தரம் தாழ்த்திவிட்டது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது சுற்றுப்பயணத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வதின் மூலம், தமிழக தேர்தல் பிரசாரத்தின் போக்கு மாறியிருக்கிறது. திமுக ஆதரவு எழுச்சியாக வெளிப்படுகிறது. ஸ்டாலின் சுற்றுப்பயணம் உயிரோட்டமாக …

Read More »

மிக இளம்வயது வேட்பாளரை நெல்லை மாவட்டத்தில் களமிறக்கிய அதிமுக- பயோடேட்டா

நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதி அதிமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் (வயது 55) அறிவிக்கப்பட்டுள்ளார். 2001-ல் போக்குவரத்து, மின்சாரம், தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலர், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் பதவிகளை வகித்தவர். செல்வமோகன் தென்காசி தொகுதி அதிமுக வேட்பாளராக எஸ். செல்வமோகன் (வயது 46) நிறுத்தப்பட்டுள்ளார். 1989- முதல் அதிமுகவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். 2010 முதல் தென்காசி தொகுதி …

Read More »

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் திசையன்விளை பொதுக்கூட்டத்தில் சீமான் பேச்சு

தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கிறார்கள் என திசையன்விளையில் நடந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். பொதுக்கூட்டம் திசையன்விளையில் நாம் தமிழர் கட்சி கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நேருஜி கலையரங்கில் நடந்தது. ராதாபுரம் தொகுதி தலைவர் ஜெரால்டு வீரசந்திரா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சித்திரை வேல் வரவேற்றார். ராதாபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் லொபினை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் …

Read More »

திருநெல்வேலி மாவட்ட தி.மு.க. தேர்தல் அறிக்கை

1. நீர் ஆதாரங்களில் உள்ள நீரைத் தனியார் குளிர்பான நிறுவனங்கள் பயன்படுத்துவது மாற்றப்பட்டு, விவசாயிகளுக்கு மட்டுமே பயன்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். 2. திசையன்விளை பகுதிக்குத் தாமிரபரணி தண்ணீர் கொண்டுவரப்படும். 3. திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்வலாறு – ஜம்புநதி நீர்த்தேக்கத் திட்டம் நிறைவேற்றப்படும். 4. இராமாநதி மேல்மட்டக்கால்வாய் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய்த் திட்டம் நிறைவேற்றப்படும். 5. மணிமுத்தாறு – தெற்கு மெயின் ரீச் கால்வாய் – திருக்குறுங்குடி நம்பியாறு இணைப்புத் …

Read More »

கட்டடத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சாத்தான்குளம் அருகே கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். திசையன்விளை அருகே உள்ள கூடுதாழையைச் சேர்ந்தவர் ரா. ரமேஷ் (40). கட்டடத் தொழிலாளியான இவரது மூத்த மனைவி 4 குழந்தைகளுடன் பிரிந்து தூத்துக்குடியில் வசித்து வருகிறாராம். இதையடுத்து, சாத்தான்குளம் அருகே உள்ள வடக்கு உடைபிறப்பு கிராமத்துக்கு வந்த ரமேஷ், தட்டார்மடத்தைச் சேர்ந்த மேரி (28) என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டாராம். ரமேஷ் தினமும் மது அருந்தி வந்து வீட்டில் …

Read More »

உவரி நாட்டுப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

உவரி பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் இடத்தை சில மீட்டர் தொலைவுக்கு விரிவுப்படுத்தக்கோரி நாட்டுப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கினர். கூடங்குளம் அணுஉலை வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.49 கோடி செலவில் உவரி கடற்கரைப் பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கப்பட்டு வருகின்றது. இந்த தூண்டில் வளைவு பாலமானது, கப்பல் மாதா ஆலயத்தின் இருமருங்கிலும் முறையே 400 மற்றும் 1,800 மீட்டர் நீளத்தில் அமையும் வகையில் பணிகள் மும்முரமாக …

Read More »