திங்கள் , கார்த்திகை 4 2024
Breaking News

Monthly Archives: மார்கழி 2016

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண் விற்பனை குழு வேண்டுகோள்

நெல்லை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் விற்பனை குழு கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவிதமான பிடித்தமும் கிடையாது இதுதொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நெல்லை விற்பனைக்குழு செயலாளர் டி.விஷ்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம், திசையன்விளை …

Read More »

வீணடிக்கப்பட்ட மணிமுத்தாறு அணை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மணிமுத்தாறு அணையின் அடிவாரத்தில உள்ள பூங்காவில், செயற்கை நீரூற்றுகளும், அணையில் இருந்து கசிவு நீர் ஓடி வரும் அழகிய கால்வாய்களும் தூர்ந்து போய் உள்ளன. ஓய்வு அறைகள், காட்சி கோபுரங்கள், விளையாட்டு சாதனங்கள் சேதம் * திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாப் பகுதியாக விளங் கிய மணிமுத்தாறு அணைபூங்கா முறையான பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டு விட்டது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்ப நேரிடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக …

Read More »

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு

திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), அவரது கணவர் ஹசரத் சேகு முகமது (ஒலி) ஆகியோர் தர்காவாகும். ஆண்டுதோறும் இங்கு கந்தூரி …

Read More »

பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ., கலெக்டரிடம் கோரிக்கை மனு

நெல்லை, பக்ரைன் நாட்டில் சிக்கி தவிக்கும் ராதாபுரம் பகுதி மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் கருணாகரனிடம், ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள மனுவில், “நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதிக்கு உட்பட்ட கூட்டப்புளி கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கென்னடி, சலேட்ராஜா, வின்சென்ட், சாகர், கிளவுடின், இடிந்தகரை கிராமத்தை சேர்ந்த பிரசாந்த், அந்தோணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 7 …

Read More »

​இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக ஓரு வாழும் ‘அண்ணாமலை’..!

சென்னை துறைமுகத்தில் தினக்கூலியாக வேலை செய்தவர், இன்று 2500 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார், அவர் எப்படி இதனை சாதித்தார் என்பதனை சுருக்கமாக பார்ப்போம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரு.எம்.ஜி.முத்து, ஏழ்மை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாததால், 1952ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் சாதாரண தினக்கூலி வேலை செய்பவராக தன் வாழ்க்கை தொடங்கினார் முத்து. கப்பல்களில் வரும் சுமைகளை …

Read More »

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா 27–ந் தேதி நடக்கிறது

திசையன்விளை, திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா வருகிற 27–ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தரங்கரை பள்ளிவாசலில் உள்ள ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகம்மது (ஒலி) தர்காவும் ஒன்றாகும். இந்த தர்காவில் ஆண்டு தோறும் கந்தூரி விழா வெகு சிறப்பாக நடைபெறும். இதில் கலந்து …

Read More »

குடிகார கணவன் தகராறு மனைவி, மகள் தற்கொலை

திருநெல்வேலி, குடிகார கணவர் தகராறு செய்ததால் மனைவி, மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.திருநெல்வேலி, திசையன்விளை அருகே வீரணன்சேரியை சேர்ந்தவர் விஜயகுமார் 30.இவரது மனைவி மகாலட்சுமி 28. காதல் திருமணம் செய்துகொண்டனர். விஜயா 9, திவ்யா 8, வெங்கடேஷ் 4 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவாராம். வீட்டில் வளர்த்த மாட்டை, மகாலட்சுமி விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை கேட்டு விஜயகுமார் தகராறுசெய்துள்ளார். …

Read More »

இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்– பரபரப்பு தகவல்கள்

இட்டமொழி அருகே காட்டுப்பகுதியில் விஷம் கொடுத்து மகளை கொன்று விட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார். 2 குழந்தைகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த சம்பவம் பற்றி பரபரப்பு தகவல்கள் வெளியாயின. காதல் திருமணம் நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே உள்ள வெங்கட்ராயபுரத்தை அடுத்த வீரணாஞ்சேரியைச் சேர்ந்தவர் பெருமாள். மின்வாரியத்தில் ஒயர்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் விஜயகுமார் (வயது 30). இவரும், பரப்பாடி அருகே உள்ள மாங்குளத்தைச் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தாலும்கூட திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து இம்மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., …

Read More »

உவரியில் அபூர்வ நிகழ்ச்சி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்தது திரளான பக்தர்கள் தரிசனம்

திசையன்விளை, உவரியில் அபூர்வ நிகழ்ச்சியாக சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த அதிசயம் நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர். சுயம்புலிங்க சுவாமி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இக்கோவிலில் சுவாமி சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மட்டும் மூலவர் மீது சூரியஒளி …

Read More »