அகில இந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்க விழா திருச்செந்தூரில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன். அ.திமு.க. பிரமுகரான இவர் அக்கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான சனிக்கிழமை திருச்செந்தூரில், அகில இந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கி கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் …
Read More »Monthly Archives: மாசி 2018
திசையன்விளையில் போலீஸை கண்டித்து மக்கள் சாலை மறியல்
திசையன்விளையில் கல்லூரி மாணவரை தாக்கியதாக, போலீஸாரை கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். திசையன்விளை தனியார் கல்லூரியில் 3 ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவர் ஜெகதீஸ். இவர், நண்பர்களான சக்திகுமார், கண்ணன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை தடுத்த நிறுத்த முயன்றனராம். அவர்கள் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீஸார் கம்பால் அடித்தனராம். இதில், நிலை தடுமாறி …
Read More »நிறைமாத கர்ப்பிணியின் இறப்புக்கு நீதி விசாரணை- இந்திய கம்யூ., கண்டன ஆர்ப்பாட்டம்
நெல்லை: திசையன்விளை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கும்பிகுளம் நடுவூரை சேர்ந்தவர் மாலினி. இவர் பிரசவத்திற்காக கடந்த 3-ம் தேதி திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து நெல்லை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதைடுத்து, …
Read More »நெல்லை அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக கைவினை பொருட்களை ஏற்றுமதி செய்யும் கிராமம்!
நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுற்றுபுதூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பனை ஓலைகளால் ஆன கைவினைப் பொருட்களை தயாரித்து வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, 1964-ம் ஆண்டு அந்த கிராமத்தில் அரசு மூலம் பனை ஓலை பொருட்கள் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது. இந்த பயிற்சி மையத்தில் பெண்களுக்கு இலவச பயிற்சியும், நாள் ஒன்றுக்கு ரூ.1 சம்பளமாகவும் வழங்கப்பட்டுள்ளது. …
Read More »பந்து வீசி சாதனை: மாணவருக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
பத்து மணி நேரம் தொடர்ந்து பந்து வீசி சாதனை படைத்துள்ள மாணவர் செந்தில்குமாருக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: பத்து மணி நேரம் தொடர்ந்து கிரிக்கெட் பந்து வீசி சாதனை படைத்துள்ள பாளையங்கோட்டை சதக்கத்துல்லா அப்பா கல்லூரியின் மாணவர் செந்தில்குமாரை மனமார வாழ்த்துகிறேன். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகில் உள்ள கரைசுற்றுபுதூரில் எளிமையான குடும்பத்தில் பிறந்து, விளையாட்டுத் துறையில் சாதிக்க வேண்டும் …
Read More »ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கர்ப்பிணி: பெற்றோர், உறவினர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவரது மகள் மாலினி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கெனவே 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் …
Read More »ஆக்சிஜன் இல்லாத ஆம்புலன்ஸ்: பிரசவித்த சிலமணி நேரங்களில் பெண் உயிரிழப்பு
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உரிய சிகிச்சை அளிக்கப்படாததால் பிரசவித்த சில மணி நேரங்களிலேயே பெண் ஒருவர் உயிரிழந்தார். இது குறித்து, சுகாதாரத் துணை இயக்குநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கும்பிகுளம் நடுவூரைச் சேர்ந்தவர் ஓட்டுநர் பிரம்மானந்தகுமார். இவரது அவரது மனைவி மாலினி. கடந்த சனிக்கிழமை 2-ஆவது பிரசவத்திற்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தையை ஈன்ற மாலினிக்கு …
Read More »தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்பு திட்டம்:நிதி ஒதுக்கியும் சுணங்கி நிற்கும் பணிகள்- சர்வேயர்கள் பற்றாக்குறை காரணமா?
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வெள்ள நீர்க்கால்வாய் தலை மதகு. – கோப்புப்படம் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களின் வறட்சிப் பகுதிகளில் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட தாமிரபரணி – கருமேனியாறு – நம்பியாறு இணைப்புத் திட்டப் பணிகள் பாதியில் நிற்கும் நிலையில் உள்ளன. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு அதிமுக அரசு திட்டத்தைத் தொடர ரூ.300 கோடி நிதி ஒதுக்கியது. ஆனாலும், …
Read More »