திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளத்தில் உள்ள அதிசயக் கிணறு தண்ணீரை உள்வாங்கியதை நிறுத்தியுள்ளது. இது இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகளுக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது.ஆயன்குளத்திலுள்ள இந்த அதிசயக் கிணறு வெள்ளக் காலங்களில் பெருமளவுக்கு தண்ணீரை உள்வாங்கி வந்தது. இதனால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பெருகியது. கடந்த ஆண்டு பருவ மழைக் காலங்களில் உபரி நீர் விநாடிக்கு 3,000 கன அடி இந்த கிணற்றுக்குள் சென்றது. பல நாட்களாக தண்ணீரை …
Read More »புதிதாக மேம்பாலங்கள்-துணை மின் நிலையங்கள்: முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
மேம்பாலங்கள் மற்றும் ஆற்றுப் பாலம் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் புதன்கிழமை திறந்து வைத்த முதல்வர் தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள 3 சாலை மேம்பாலங்கள், ஒரு ஆற்றுப் பாலம் ஆகியவற்றை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடந்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி:-நாமக்கல் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் வகையில், மேம்படுத்தப்பட்ட மல்லியக்கரை-ராசிபுரம்-திருச்செங்கோடு-ஈரோடு சாலையை காணொலிக் காட்சி …
Read More »நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்து வந்த வாலிபர் சாவு
நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்து வந்த வாலிபர் சாவு திசையன்விளை, நிபந்தனை ஜாமீனில் கையெழுத்திட திசையன்விளை போலீஸ் நிலையத்துக்கு விஷம் குடித்து வந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். விஷம் குடித்த வாலிபர் நெல்லை மாவட்டம் திசையன்விளை–இடையன்குடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜெயபால் நாடார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக பிரமுகர். இவருடைய மகன் ஜெனிபர் (வயது 27). இவரை போலீஸ் எனக்கூறி …
Read More »மணல் கடத்தலை அம்பலப்படுத்தியதால் எஸ்.ஐ தாக்குதல் காவல் நிலையம் வாசலில் விஷம் குடித்த வாலிபர் சாவு
திசையன்விளை: திசையன்விளையில் மணல் கடத்தல் விவகாரத்தை அம்பலப்படுத்திய வாலிபர், எஸ்ஐ தாக்கியதால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக அவரது தந்தையான அதிமுக பிரமுகர் டிஐஜியிடம் புகார் அளித்துள்ளார். நெல்லை மாவட்டம் திசையன்விளை பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜெயபால்(65). அதிமுக முன்னாள் நகர செயலாளர். இவரது மகன் ஜெனிபர்(33). இவருக்கு திருமணமாகி மனைவி, மகள் உள்ளனர். ஜெனிபர் மீது கடந்த 3ம் தேதி அப்பகுதியைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவர், …
Read More »நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது
திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திசையன்விளை அருகே நம்பியாற்றில் பைக்கில் மணல் கடத்துவதாக திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவ்வழியாக மணல் கடத்திய அணைக்கரையைச் சேர்ந்த குயின்ராஜ் (35), சேகர் (36) ஆகிய இருவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளையும் …
Read More »தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு
தாமிரவருணி வெள்ளநீர் கால்வாயின் 3-ஆம் கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். தாமிரவருணி ஆற்றுடன் கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளநீர் கால்வாயில் முதல் 2 கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. 3-ஆம் கட்டப் பணிகள் நான்குனேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள …
Read More »நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் வேளாண் விற்பனை குழு வேண்டுகோள்
நெல்லை, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் விளைபொருட்களை இருப்பு வைத்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என வேளாண் விற்பனை குழு கேட்டுக் கொண்டுள்ளது. எந்தவிதமான பிடித்தமும் கிடையாது இதுதொடர்பாக வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை நெல்லை விற்பனைக்குழு செயலாளர் டி.விஷ்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– நெல்லை மாவட்டத்தில் நெல்லை, வள்ளியூர், அம்பாசமுத்திரம், சங்கரன்கோவில், பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர், சிவகிரி, திருவேங்கடம், திசையன்விளை …
Read More »நெல்லை மாவட்டத்தில் மிதமான மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மிதமான மழை பெய்தது. திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துவிட்டது. தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்தாலும்கூட திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்யாதது விவசாயிகளை வேதனையில் ஆழ்த்தியது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் இருந்து இம்மாவட்டத்தில் மிதமான மழை பெய்தது. மேகமூட்டத்துடன் காணப்பட்டதால் குளிர்ந்த காற்று வீசியது. காலை 8 மணி நிலவரப்படி பாளையங்கோட்டையில் 6 மி.மீ., திருநெல்வேலியில் 4 மி.மீ., சங்கரன்கோவிலில் 2 மி.மீ., …
Read More »திசையன்விளை அருகே பரிதாபம் கணவர் பிரிந்து சென்றதால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
திசையன்விளை, கணவர் பிரிந்து சென்றதால் மனமுடைந்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கணவரை பிரிந்து… நெல்லை மாவட்டம் திசையன்விளை விஸ்வகர்மா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் ஆசாரி. இவருடைய மகள் பார்வதி(வயது30). இவருக்கும், தூத்துக்குடியைச் சேர்ந்த ரஞ்சித்குமாருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இத்தம்பதியருக்கு 4½ வயதில் சுவேதா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமான சில மாதங்களிலேயே கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. பிரச்சினை …
Read More »கார் கவிழ்ந்து முதியவர் சாவு
பாளையங்கோட்டை அருகே கார் கவிழ்ந்ததில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், குரும்பூர் மூலக்கரை கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன் (72). இவரது மகன் பார்வதிமுத்து (36). இவர் கோவையில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். குடும்பத்துடன் கோவையில் வசித்து வந்தார். இந்நிலையில், திசையன்விளையில் உறவினர் இல்ல நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாராயணன், பார்வதிமுத்து, அவரது மகன் தீனதயாளன் உள்ளிட்டோர் காரில் சனிக்கிழமை திசையன்விளை வந்தனர். நிகழ்ச்சி …
Read More »