கப்பல் மாதா தேவாலயமானது புனித மேரி மாதாவுக்கான தேவாலயமாகும். கடற்கரையில், கப்பலைப் போன்ற தோற்றத்தில், இது கட்டப்பட்டுள்ளது. முதல்முதலாகக் கட்டப்பட்ட கப்பல் மாதா தேவாலயம், கடலரிப்பின் காரணமாக அழிந்துவிட்டது.
அதன்பிறகு அத்தேவாலயத்தின் இடிபாடுகளின் மீது இப்போதுள்ள ஆலயம் 1974 ஆம் ஆண்டு எழுப்பப்பட்டது. இத்தேவாலயத்தின் சக்தியைப்பற்றி நிறைய கதைகள் சொல்லப்படுகின்றன. பாரம்பரிய சடங்குகள் செய்யப்படுகின்றன.
இளம்பெண்கள் இங்கு உள்ள மடத்திற்கு வந்து ஒரு இரவு முழுதும் தங்கிச் செல்வது அவற்றில் ஒரு சடங்காக அனுசரிக்கப்படுகிறது. முன்பொரு நாள் இரவில் இங்குள்ள செல்வமாதாவின் திருச்சிலை மீது ஒரு பிரகாசமான ஒளி தோன்றி ஒருமணி நேரம் பிரகாசித்ததாம்.
வேறு விளக்கோ மெழுகுவர்த்தியோ எரியாதபோது இவ்விதமான அதிசய ஒளி தோன்றிய செப்டம்பர் 18 ஆம் நாளை ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்.
இத்தேவாலயமானது கோவா கிறித்தவ துறவிகளால் பல ஆண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வந்தது. திருநெல்வேலியிலிருந்து 75 கிலோமீட்டர் தொலைவிலுள்ள உவரி என்னும் கடற்கரை கிராமத்தில் இத்தேவாலயம் அமைந்துள்ளது.
நன்றி:http://tamil.nativeplanet.com/tirunelveli/attractions/kappal-matha-church/