Breaking News

Recent Posts

விடாது பெய்யும் பெருமழை.. 24 மணி நேரமாக இருளில் மூழ்கிய திசையன்விளை தாலுகா.. தொலைதொடர்பும் துண்டிப்பு

நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி நேரமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். திருநெல்வேலியில் கொட்டித்தீர்த்த அதிகனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலப்பாளையம் பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருவதால் …

Read More »

திசையன்விளை அருகே கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு:

திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் மூழ்கி உயிரிழந்த மாணவர்கள் திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே நவ்வலடி கிராமத்தில் கடலில் குளித்த 3 பள்ளி மாணவர்கள் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்துக்கு முன்பாக அம்மாணவர்கள் ஏற்கெனவே பதிவிட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகியுள்ளது. திசையன்விளை அருகே உள்ள நவ்வலடி கிராமத்தை சேர்ந்த மகாலிங்கம் மகன் முகேஷ் (13) , இசக்கியப்பன் மகன் …

Read More »

திசையன்விளை இளைஞர் முத்தையா ஆவணக் கொலையா? உண்மை அதுவல்ல.. காவல்துறை விளக்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே இளைஞர் முத்தையா ஆவணக்கொலை செய்யப்பட்டதாக புகாரில் காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. முத்தையா ஜாதிய படுகொலை செய்யப்படவில்லை என்றும் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது கொலை செய்யப்பட்ட முத்தையா, சுரேஷ் என்பவரின் தங்கையை அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்துள்ளார்; முத்தையாவின் உறவினரால் அப்பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு அது தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது என்றும் காவல் துறை தெரிவித்துள்ளது, …

Read More »

நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் …

Read More »

பைக் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் சாவு

திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் உயிரிழந்தார். திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா. இவரது, வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நண்பரான பரத்சிங் கவுல் மகன் கோசின் கவுல் (24) ஞாயிற்றுக்கிழமை காலை ஆயன்குளம் வந்துள்ளார். பின்னர், அவர் மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, ஆயன்குளம் திருப்பத்தில் எதிர்பாராமல் வாகனம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த கோசின் கவுல் …

Read More »