Breaking News

Recent Posts

சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்

சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வியாழக்கிழமை (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா பதியில் இருந்து புதன்கிழமை (மார்ச் 2) சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி சாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த வாகனப் பேரணி திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, …

Read More »

திசையன்விளை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத் துறையினர் சென்று பதிவாகியிருந்த விலங்கின் கால் தடத்தைப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே உள்ள வாகைனேரியைச் சேர்ந்தவர் மலையாண்டி. மாடு மேய்க்கும் தொழிலாளி. இவரது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டதாம். அவர் வெளியே வந்தபோது, தொழுவத்தில் இருந்து சிறுத்தை போன்ற …

Read More »

அ.தி.மு.க. பொதுக்கூட்டம்

முதல்- அமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திசையன்விளை நேரு திடலில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது. அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் நாராயணபெருமாள் தலைமை தாங்கினார். மாநில சிறுபான்மை பிரிவு துணை செலாளர் இன்பதுரை, ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் ஏ.கே.சீனிவாசன், நகர ஜெயலலிதா பேரவை ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை புறநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. …

Read More »

பக்தர்களைக் காக்கும் பாலா திரிபுரசுந்தரி : கொம்மடிக்கோட்டை

அம்பிகையின் பல வடிவங்களில் ஒன்று பாலா திரிபுரசுந்தரி. லலிதா பரமேஸ்வரியின் விளையாட்டின் ரூபமாக பண்டாசுர வதத்தின்போது தோன்றியவள் பாலாதேவி. மன்மதனை ஈசன் எரித்த சாம்பலிலிருந்து உற்பத்தியானவன் பண்டன் எனும் அசுரன். ஒரு பெண்ணைத் தவிர தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது என வரம் பெற்றான். அந்த உற்சாகத்தில் அவன் தேவர்களையும் ஏனையோரையும் துன்புறுத்தினான். அவர்கள் பராசக்தியைச் சரணடைய, தேவி தன் சேனைகளோடு போர் புரிந்து பண்டாசுரனை வதைத்தாள். இவள் மும்மூர்த்திகளுக்கும் …

Read More »

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்படும் ஊர்கள் அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் மின்தடை ஏற்பட உள்ள ஊர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டத்தில் விக்கிரமசிங்கபுரம், பணகுடி, கடையநல்லூர், வள்ளியூர், களக்காடு, கூடங்குளம், கோட்டைகருங்குளம், நவ்வலடி மற்றும் திசையன்விளை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் கீழ்கண்ட ஊர்களுக்கு மின்தடை செய்யப்படுகிறது. நாளை விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலார், ரவணசமுத்திரம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, …

Read More »