இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் நடைபெரும் ச்தருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் நீங்கவேண்டும் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இருந்து வேல் ரதம் பவனி வருகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் புறப்பட்ட சத்ருசம்ஹார வீரவேல் ரதத்தினை தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலர் இரா. சிவமுருக ஆதித்தன் உள்ளிட்டோர் உடன்குடியில் வரவேற்றனர். இந்த ரதம் குலசேகரன்பட்டினம், உடன்குடி, பஜார், பள்ளக்குறிச்சி வழியாக திசையன்விளை சென்றது. ரதத்தில் பவனி வந்த முருகப்பெருமானை பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று வழிபட்டனர். நிகழ்ச்சியில் திரளான இந்து முன்னணி, பாஜக, ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
நன்றி : தினமணி