செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / கோவில்கள் / இந்து / உவரியில் அபூர்வ நிகழ்ச்சி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்தது திரளான பக்தர்கள் தரிசனம்

உவரியில் அபூர்வ நிகழ்ச்சி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்தது திரளான பக்தர்கள் தரிசனம்

திசையன்விளை,

உவரியில் அபூர்வ நிகழ்ச்சியாக சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த அதிசயம் நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.

சுயம்புலிங்க சுவாமி

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இக்கோவிலில் சுவாமி சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மட்டும் மூலவர் மீது சூரியஒளி விழும் அபூர்வ நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி மார்கழி மாதத்தின் முதல்நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், திருப்பள்ளி எழுச்சி, சிறப்பு பூஜை, உதயமார்த்தாண்ட பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடந்தது. முன்னதாக காலை 6.35 மணி அளவில் சுயம்புலிங்க சுவாமி கோவில் மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது. இதனை திரளான பக்தர்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர்.

அன்னதானம்

பின்னர் மதியம் உச்சிகால அபிஷேகம், உச்சிகால பூஜையை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் சாயரட்சை பூஜை, ராக்கால பூஜை ஆகியனவும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.

நன்றி : தினத்தந்தி

About Eesu

Check Also

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்

திசையன்விளை, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தசாரா …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன