Breaking News

சசிகலா புஷ்பா ஆதரவாளர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி

சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த சகோதரிகளான பானுமதி, ஜான்சிராணி ஆகிய இருவரும், சசிகலா புஷ்பா குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக காவல் நிலையத்தில் புகார் செய்திருந்தார். இந்த வழக்கில், பணிப் பெண்களுக்கு ஆதரவாக வாதாடி வந்த திசையன்விளையைச் சேர்ந்த வழக்குரைஞர் சுகந்தி ஜெய்சன் வீட்டின் மீது சிலர் தாக்குதல் நடத்தினர்.
இதுதொடர்பாக, திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, சசிகலா புஷ்பாவின் ஆதரவாளர்களான நாடார் மக்கள் சக்தி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹரி நாடார், ராமலிங்கம், சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில், சசிகலா புஷ்பா, ஹரி நாடார், ராமலிங்கம் மற்றும் சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோரது ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் மீண்டும் ஜாமீன் வழங்கக் கோரி ராமலிங்கம் மற்றும் சத்ய சித்திரைக்குமார் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் அவர்கள் வெளியே சென்று சாட்சிகளைக் கலைக்க வாய்ப்புள்ளதாக போலீஸார் தெரிவித்திருப்பதை புறக்கணிக்க முடியாது என்று கூறி, இருவரது ஜாமீன் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நன்றி : தினமணி

About Eesu

Check Also

விடாது பெய்யும் பெருமழை.. 24 மணி நேரமாக இருளில் மூழ்கிய திசையன்விளை தாலுகா.. தொலைதொடர்பும் துண்டிப்பு

நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருகிறது. திசையன்விளை தாலுகாவில் கடந்த 24 மணி …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன