செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / செல்போனில் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி திருமணமான பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

செல்போனில் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி திருமணமான பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டல்: 4 பேர் கைது

திசையன்விளை

செல்போனில் சேர்ந்து எடுத்த படத்தை காட்டி திருமணமான

நெல்லை மாவட்டம் திசையன்விளை நெடுஞ்சாலை தெருவை சேர்ந்த சங்கரன் மகன் முரளி (வயது 19). இவர் காமராஜர் தெருவை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்தனர். மேலும் பல்வேறு இடங்களுக்கும் சென்று வந்தனர். அப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்போனில் போட்டோ எடுத்து கொண்டனர்.

இந்நிலையில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். இதையடுத்து அவர் கணவருடன் சேர்ந்து வசித்து வந்தார். தன்னை திருமணம் செய்யாமல் வேறொருவரை திருமணம் செய்ததால் முரளி ஆத்திரமடைந்தார். இது பற்றி அவர் தனது நண்பர்களிடம் கூறினார்.

இதையடுத்து அந்த பெண்ணை பழிவாங்க திட்டமிட்ட முரளி மற்றும் அவரது நண்பர்கள் தினேஷ்குமார், அவரது தம்பி நடேசன்(20), அவர்களது தந்தை சுந்தர் (49) ஆகியோர் அந்த பெண்ணை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது அவர்கள், நீ முரளியிடம் சேர்ந்து எடுத்த போட்டோ மற்றும் செல்போனில் பேசிய விவரங்கள் எங்களிடம் உள்ளது. எனவே இது பற்றி கணவர் மற்றும் குடும்பத்தினரிடம் தெரிவிக்காமல் இருக்க வேண்டுமானால் எங்களுக்கு பணம் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்தனர்.

இதுபற்றி அந்த பெண் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராபர்ட் வழக்கு பதிவு செய்து முரளி, சுந்தர் மற்றும் சுந்தரின் மகன்கள் தினேஷ்குமார், நடேசன் ஆகியோரை கைது செய்தார்.

நன்றி: மாலைமலர்

About ragavan

Check Also

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது …

2 comments

  1. அரசு அதிகாரிகள் கவனத்திற்கு
    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா திசையன்விளை கிராமத்தில் சட்டத்திற்க்கு விரோதமாக ஒருவர் மது விற்று வருகிறார் , காலை 5மணி முதல் மற்றும் காந்திஜெயந்தி தினத்திலும் மது விற்பனை நடைபெறுகிறது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  2. அரசு அதிகாரிகள் கவனத்திற்கு
    திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா திசையன்விளை கிராமத்தில் சட்டத்திற்க்கு விரோதமாக ஒருவர் மது விற்று வருகிறார் , காலை 5மணி முதல் மற்றும் காந்திஜெயந்தி தினத்திலும் மது விற்பனை நடைபெறுகிறது காவல்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன