திசையன்விளையில் கல்லூரி மாணவரை தாக்கியதாக, போலீஸாரை கண்டித்து, பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திசையன்விளை தனியார் கல்லூரியில் 3 ஆண்டு பொறியியல் படித்து வரும் மாணவர் ஜெகதீஸ். இவர், நண்பர்களான சக்திகுமார், கண்ணன் ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் சென்றாராம். அப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், அவர்களை தடுத்த நிறுத்த முயன்றனராம். அவர்கள் நிற்காமல் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால், அவர்களை போலீஸார் கம்பால் அடித்தனராம். இதில், நிலை தடுமாறி மூவரும் கீழே விழுந்து காயமடைந்தனர். இதையறிந்த அப்பகுதி மக்கள் 200-க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வள்ளியூர் சரக துணைக் கண்காணிப்பாளர் கனகராஜ் பேச்சு நடத்தி, சம்பந்தப்பட்ட காவலர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து, மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.
நன்றி : தினமணி