திசையன்விளை:
திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் கட்டம் போட்ட லுங்கியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் வாயில் நுரை தள்ளியபடி கிடந்ததால் விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து அவரது உடல் கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
நன்றி : மலை மலர்