செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / கோவில்கள் / கிறிஸ்தவம் / திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!

திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார்.

திசையன்விளையில் உலக ரட்சகர் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி, புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைத்தார். தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது.

நேற்று, புதிய ஆலய அர்ச்சிப்பு பெருவிழா திருப்பலியுடன் நடந்தது. இரவு ஆலய வளாகத்தில் சப்பர பவனி நடைபெற்றது. இந்நிலையில், இன்று காலையில் மறை மாவட்ட முதன்மை குரு கிருபாகரன் தலைமையில் பெரு விழா கூட் டுத்திருப்பலியும், மதியம் நகர வீதிகளில் சப்பரபவனியும், இரவு நற்கருணை ஆசீரும் நடைபெறவுள்ளது. தொடர்ந்து கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.

நன்றி   : News7 Tamil

About Eesu

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன