அகில இந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சி தொடக்க விழா திருச்செந்தூரில் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ள மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் பத்மநாதன். அ.திமு.க. பிரமுகரான இவர் அக்கட்சியிலிருந்து ஒதுங்கியிருந்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினமான சனிக்கிழமை திருச்செந்தூரில், அகில இந்திய எம்.ஜி.ஆர். திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிதாக கட்சியை தொடங்கி கட்சி கொடியையும் அறிமுகப்படுத்தினார். பின்னர் கட்சியின் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
நிறுவனர்-தலைவராக பத்மநாதன், பொருளாளராக திருச்செந்தூர் ஆனந்தி, அவைத் தலைவராக திண்டுக்கல் குமரேசன், துணைத் தலைவர் மற்றும் இளைஞரணிச் செயலராக மடத்துக்குளம் செந்தில்குமார், துணைப் பொதுச் செயலராக திசையன்விளை ஜெயசித்ராதேவி, கொள்கை பரப்புச் செயலர்களாக கரூர் கலைசெல்வி, மடத்துகுளம் விஜயா, நாமக்கல் பூங்கோதை, மகளிரணி செயலராக முருகேஸ்வரி, வர்த்தகரணி செயலராக சுனிதா பேகம், அமைப்புச் செயலர்களாக திருநெல்வேலி செல்வராணி, பிரபாகரன், பரமசிவம், பாலகுரு, செய்தித் தொடர்பாளராக ஜீவா பழனிவேல் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
நன்றி : தினமணி