திருமணம் செய்வதாகக் கூறி, கல்லூரி மாணவியை கடத்தியதாக திசையன்விளையில் இளைஞரை போலீஸார் கைது செய்தனர். திசையன்விளை மன்னார்ராஜா கோயில் தெருவைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் லிங்கத்துரை (20). சேலத்தில் பாத்திர வியாபாரம் செய்து வருகிறார்.
இவரும், இதேபகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவியும் காதலித்து வந்தனராம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளியே சென்ற மாணவி வீடு திரும்பிவில்லையாம். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவி கிடைக்கவில்லை. புகாரின்பேரில், திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருமணம் செய்வதாக தெரிவித்து மாணவியை லிங்கத்துரை கடத்தி சென்றது தெரியவந்தது.
மாணவியுடன் நின்றிருந்த லிங்கத்துரையை போலீஸார் கைது செய்தனர். மாணவியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
நன்றி: தினமணி