செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / திருவனந்தபுரம் - ஆற்றங்கரை பேருந்து வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க கோரிக்கை

திருவனந்தபுரம் - ஆற்றங்கரை பேருந்து வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க கோரிக்கை

திருவனந்தபுரத்திலிருந்து ஆற்றங்கரை வரை இயக்கப்படும் பேருந்தை திசையன்விளை வரை நீட்டித்து இயக்க தமிழக – கேரள முதல்வர்களுக்கு திசையன்விளை பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திசையன்விளை பயணிகள் நலச் சங்கம் சார்பில், அதன் தலைவர் சாலமோன் ஜவஹர், செயலர் பிரைட், பொருளாளர் வசந்தன் ஆகியோர் தமிழகம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள், போக்குவரத்து துறை அமைச்சர்கள், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர்.
அதில், தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் மற்றும் கேரள மாநில போக்குவரத்து கழகம் இணைந்து திருவனந்தபுரத்திலிருந்து நெல்லை மாவட்டத்திலுள்ளஆற்றங்கரை வரை புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இவ்வழித்தடத்தை 10 கி.மீ. தொலைவில் உள்ள திசையன்விளை வரை நீட்டித்து தர வேண்டுகிறோம்.
திசையன்விளை சுமார் 40 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட சிறப்பு நிலை பேரூராட்சிஆகும். இப்பகுதியைச் சுற்றி 30-க்கும் மேற்பட்ட கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன. திசையன்விளை தனி வட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனையும் உள்ளது.
கேரள மக்கள் ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில், புனித அந்தோனியார் திருத்தலம், அணைக்கரை புனித பிரகாசியம்மாள் திருத்தலம், சித்தூர் தென்கரை மகாராஜா திருக்கோயில், விஜயநாராயணம் மேத்தப்பிள்ளை அப்பா பள்ளிவாசல் ஆகிய ஆன்மிக ஸ்தலங்களுக்கு திசையன்விளை நகரம் மையப்பகுதியாகும். திசையன்விளையில் இருந்து அனைத்து ஊர்களுக்கும் இணைப்பு பேருந்து வசதி உள்ளது.
எனவே திருவனந்தபுரம் -ஆற்றங்கரை வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்தை, திசையன்விளை வரை நீட்டித்து பொதுமக்கள், பக்தர்கள் பயன்பெறும் வகையிலும், வருவாய் ஈட்டித்தரும் வகையிலும் இயக்கிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளனர்.

 

நன்றி: தினமணி

About Eesu

Check Also

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன