நெல்லை: நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கரைசுற்றுபுதூர் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக பனை ஓலைகளால் ஆன கைவினைப் பொருட்களை தயாரித்து வெற்றிகரமாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். காமராஜர் முதலமைச்சராக இருந்த போது, 1964-ம் ஆண்டு அந்த கிராமத்தில் அரசு மூலம் பனை ஓலை பொருட்கள் உற்பத்தி பயிற்சி மையம் தொடங்கப்பட்டது.
இந்த பயிற்சி மையத்தில் பெண்களுக்கு இலவச பயிற்சியும், நாள் ஒன்றுக்கு ரூ.1 சம்பளமாகவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் பயிற்சி பெற்ற பெண்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 50 ஆண்டுகளுக்கு மேலாக பனை ஓலைகளால் ஆன கைவினைப் பொருட்களை தயாரித்து வருகின்றனர்.
பனை ஓலைகளை பக்குவப்படுத்தி, அவற்றை பல வண்ணங்களில் தொய்த்து காய வைக்கின்றனர். பின்னர் அந்த பனை ஓலைகள் மூலம் பூக்கூடைகள், அர்ச்சனை தட்டுக்கள், தொப்பிகள், நகை பெட்டிகள் என 26 பொருட்களை அவர்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்த கைவினைப் பொருட்கள் சென்னை, பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட நகரங்களுக்கும் பல வெளிநாட்டுகளுக்கும் விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ரூ.3 முதல் ரூ.100 வரை அவை விற்கப்படுவதாக அவர்கள் கூறிகின்றன. பனை மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதை தடுத்து அவற்றை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பனை ஓலை கைவினை பொருள் தயாரிப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளவர்களுக்கு நிதியுதவி மாணியம் வழங்க வேண்டும் என்றும் கரைசுற்றுபுதூர் கிராம மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நன்றி: தினகரன்