திருநெல்வேலி : திசையன்விளையில் உள்ள பகவதியம்மன் கோயிலை இடிக்க முற்படும் கும்பலை கண்டித்து இந்துமக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே விஸ்வநாததாஸ் நகர் உள்ளது. இந்து இந்து மருத்துவர் சமூகத்தினருக்காக அரசு கட்டிகொடுத்த வீடுகளில் வசிக்கின்றனர். அங்கு பல ஆண்டுகளாக வழிபட்டுவரும் பகவதிஅம்மன் கோயிலை இடிக்க சிலர் முயற்சித்துள்ளனர்.இது தொடர்பாக வள்ளியூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கோயிலை இடிக்க வரும் முயற்சியில் ஈடுபடும் மாற்று மதத்தினரை கண்டித்து கலெக்டர் கருணாகரனிடம் மனுஅளித்தனர். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்தனர்.
நன்றி : தினமலர்