பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக பிஎஸ்என்எல், திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை ரூ. 510-க்கு சி-டாப்அப், வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்அப்-களுக்கு ரூ. 550 எஸ்ட்ரா டாக்டைம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக புதிய தரைவழி இணைப்புத் திட்டத்தை உலடஉதஐஉசஇஉ (கக)-49 என்ற பெயரில் ரூ. 49 மாத வாடகையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதிலும் வாடிக்கையாளர்கள் இரவு 10.30முதல் காலை 6 மணி வரை இலவச அழைப்பு, ஞாயிற்றுகிழமை முழுவதும் இலவச அழைப்புச் சலுகை உண்டு. இத்திட்ட இணைப்பிலிருந்து செய்யப்படும் பிஎஸ்என்எல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு ரூ. 1, இதர நெட்வொர்க் அழைப்புகளுக்கு ரூ. 1.2 கட்டணம் வசூலிக்கப்படும். இத்திட்டம் 12 மாதங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். அதன்பிறகு இத்திட்டம் சாதாரண தரைவழி இணைப்புத் திட்டமாக மாற்றப்படும்.
அதிகமாக பேசும் எண்களை நண்பர்கள், குடும்பம் என்ற சிறப்புத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளலாம். இந்த எண்கள் இந்தியாவில் உள்ள எந்த தரைவழி, செல்லிடப்பேசி எண்ணாகவும் இருக்கலாம். ஓர் எண்ணுக்கு ரூ. 21, இரு எண்களுக்கு ரூ. 39, மூன்று தரைவழி எண்களுக்கு ரூ. 49 மாதத்துக்கு கூடுதலாகச் செலுத்த வேண்டும். தரைவழி இணைப்பு பெறுவோருக்கு அமைப்புக் கட்டணம் ரூ. 600 தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மாத வாடகை ரூ. 249 (வரி தனி) கொண்ட திட்டத்தில் 8 எம்பிபிஎஸ் ஒரே சீரான வேகத்தில் 5 ஜிபி வரையிலும், அதன்பிறகு 1 எம்பிபிஎஸ் வேகத்தில் அளவில்லா இணையதள வசதி, அனைத்து நெட்வொர்க்-களுக்கும் இலவச அழைப்பு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்.
பிஎஸ்என்எல்.க்கு மாற விரும்பும் மற்ற நெட்ஒர்க்-தாரர்கள் மொபைல் எண்ணை மாற்றாமலேயே எம்.என்.பி. மூலம் மாறிக்கொள்ளலாம்.
பிஎஸ்என்எல் சலுகைகளைப் பெற சிறப்பு மேளாக்கள் நடத்தப்படவுள்ளன. அதன்படி, சிறப்பு மேளாக்கள் நடைபெறும் இடம், தேதி: வியாழக்கிழமை (மார்ச் 8) – வள்ளியூர், என்.ஜி.ஓ. காலனி, தென்காசி தொலைபேசி நிலையங்களில்; 9ஆம் தேதி – களக்காடு, வி.கே.புரம் தொலைபேசி நிலையங்களில்; 12ஆம் தேதி – திசையன்விளை, புளியங்குடி, வண்ணார்பேட்டை தொலைபேசி நிலையங்களில்; 13ஆம் தேதி – மேலப்பாளையம், அன்புநகர் தொலைபேசி நிலையங்களில்; 15ஆம் தேதி- செங்கோட்டை, சங்கர்நகர் தொலைபேசி நிலையங்களில்; 16 ஆம் தேதி – சேரன்மகாதேவி, வடக்கன்குளம், பனவடலிச்சத்திரம் தொலைபேசி நிலையங்களில்.
நன்றி: தினமணி