செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / கோவில்கள் / இந்து / முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்

திசையன்விளை,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தசாரா திருவிழா

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குலசேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலும் ஒன்று ஆகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதமிருந்து பல்வேறு வகையான வேடங்கள் அணிந்து கிராமம், கிராமமாக சென்று காணிக்கை பெற்று கோவிலில் செலுத்துவது வழக்கம்.

வேடப்பொருட்கள் விற்பனை…

தசரா திருவிழா கொடியேற்றம் நடைபெறுவதால் வேடம் அணியும் பக்தர்களுக்கு என பல்வேறு வகையான பொருட்கள் திசையன்விளை பஜாரில் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளது. அம்மன் கிரீடங்கள், காளி, விநாயகர், அனுமன், ராஜா, ராணி, குரங்கு, கரடி, புலி, சிங்கம் என பல்வேறு வகையான வேட பொருட்கள் திசையன்விளை பஜாரில் உள்ள கடைகளில் விற்பனைக்காக குவிந்துள்ளன. ரூ.50 முதல், ரூ.5 ஆயிரம் வரையிலும், பல வண்ண கலர்களிலும் விற்பனைக்கு வந்துள்ளன. வேடம் அணியும் பக்தர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை மும்முரமாக வாங்கி செல்கின்றனர்.
நன்றி : தினத்தந்தி

About Eesu

Check Also

உடன்குடியில் சத்ருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு வரவேற்பு

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் நடைபெரும் ச்தருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜாதி, …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன