செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / ராதாபுரம் அருகே தேங்காய் நார் தொழிற்கூடத்தில் தீ விபத்து

ராதாபுரம் அருகே தேங்காய் நார் தொழிற்கூடத்தில் தீ விபத்து

ராதாபுரம் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்கூடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
ராதாபுரத்தில் இருந்து சமூகரெங்கபுரம் செல்லும் சாலையோரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்கூடம் அமைந்துள்ளது. இந்த தொழிற்கூடத்தில் தேங்காய் நெட்டில் இருந்து துப்பு தயாரித்து பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்பி வருகின்றனராம்.
இந்த தொழிற்கூடத்தில் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த சேர்மகனி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை பிற்பகல் இந்த தொழிற்கூடத்தில் வெல்டிங் வேலை நடைபெற்று வந்ததாம். அப்போது ஏற்பட்ட தீப்பொறி, அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த தும்புக் குவியலில் விழுந்ததில் தீப்பிடித்ததாம். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்த நிலையில், தொழிற்கூடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழுதடைந்த இரண்டு லாரிகள் தீயில் எரிந்து சாம்பலானது. இதையடுத்து திசையன்விளை, கூடங்குளம், வள்ளியூர் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து வந்த வீரர்கள் 8 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
மேலும், தேங்காய் நார் தொழிற்கூட மேலாளர் சரியான தகவல்களை தெரிவிக்காததால், இந்த தொழிற்கூடம் நடத்துவதற்கு அனுமதி பெறப்பட்டதா, பாதுகாப்பு விதிமுறைகள், தீத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்ற சந்தேகங்கள்அதிகாரிகளிடம் எழுந்துள்ளது. மேலும், இந்த தொழிற்கூடத்திற்கு மேலே கூடங்குளம் அணுமின்நிலையத்திலிருந்து மத்திய தொகுப்பிற்கு மின்சாரம் செல்லும் சக்தி வாய்ந்த மின் வயர் செல்கிறது. எனவே அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இந்த தொழிற்கூடத்தை தீவிரமாக ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

நன்றி: தினமணி

About Eesu

Check Also

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன