செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / வள்ளியூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வள்ளியூரில் குண்டர் சட்டத்தில் ஒருவர் கைது

வள்ளியூரில் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
ராதாபுரத்தை அடுத்த சமூகரெங்கபுரம் அருகே உள்ள ஈணன்குடியிருப்பைச் சேர்ந்த நாராயணன் மகன் ரவிக்குமார் (34). இவர் மீது மணல் கடத்தல், கத்தியை காட்டி மிரட்டியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் வள்ளியூர், ராதாபுரம், திசையன்விளை காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
இதையடுத்தது பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக ரவிக்குமாரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் பேரில் , மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், ரவிக்குமாரை வள்ளியூர் காவல் ஆய்வாளர் சுரேஸ்குமார் கைது செய்தார்.

 

நன்றி  : தினமணி

About Eesu

Check Also

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன