தமிழகத்தைச் சேர்ந்த 4 மணல் ஏற்றுமதி நிறுனங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்
தமிழகத்தைச் சேர்ந்த 4 மணல் ஏற்றுமதி நிறுனங்களில் இன்று வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர். 100 இடங்களுக்கு மேல் இந்த ஐடி ரெய்டு நடத்தப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக தாது மணலை ஏற்றுமதி செய்ததாகவும், வெளிநாடுகளில் முறைகேடாக பண முதலீடு செய்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு இந்த ரெய்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனம் மற்றும் விவி மினரல்ஸ் நிறுவனத்தின் உரிமையாரான வைகுண்டராஜன் இல்லத்திலும் ரெய்டு நடந்து வருவதாக கூறப்படுகிறது. மணல் ஏற்றுமதி நிறுவனங்கள் வைத்திருக்கும் சுகுமார், சந்திரேசன் மற்றும் மணிகண்டன் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் ரெய்டு நடந்து வருவதாக தகவல்.
COMMENT
இந்த விவகாரம் குறித்து வருமான வரித் துறை அதிகாரிகள், ‘கடல் தாது மணல் ஏற்றுமதிக்குத் தடை விதிக்கப்பட்ட பின்னரும், இந்த நிறுவனங்கள் தொடர்ந்து ஏற்றுமதியில் ஈடுபட்டு வருவதாக எங்களுக்குத் தகவல் வந்தது. மேலும், வெளிநாடுகளில் சட்டவிரோதமாக பண முதலீடு செய்துள்ளதாகவும் இந்த நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது’ என்று கூறியுள்ளனர்.
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள், சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.
நன்றி : NDTV Tamil