செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / நிகழ்வுகள் / விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை... 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை

விவி மினரல்ஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை... 100க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி வேட்டை

விவி மினரல்ஸ் : சென்னையில் விவி மினரல்ஸ் நிறுவன அதிபர் மற்றும் அந்நிறுவனத்திற்கு சொந்தமான அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் அமைந்துள்ளது விவி மினரல்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவகம். இந்த நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் வீடுகளில் இன்று அதிகாலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

விவி மினரல்ஸ் வருமான வரித்துறை சோதனை :
கடந்த 3 ஆண்டுகளாகவே இந்நிறுவனம் வருமான வரியை முறையாக செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை நுங்கம்பாக்கம், திருவான்மியூர், நெல்லை மாவட்டம் திசையன்விளை, தூத்துக்குடி உட்பட தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது. வரி புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

About Eesu

Check Also

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும் ஐ.எஸ்.இன்பத்துரை தகவல்

தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது கட்ட பணிகள் வருகிற டிசம்பர் மாதத்தில் தொடங்கப்படும். நெல்லை, தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்ட 3–வது …

மறுமொழியொன்றை இடுங்கள்

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன