Breaking News

Monthly Archives: ஆடி 2015

நான்கு பேரை கொலை செய்ய முயற்சி ஒருவருக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை

ஜூலை 22, 2015 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூர், பூச்சிக்காடு பகுதியில் நான்கு பேரை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் 10 ஆண்டு ஜெயில், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கூடுதல் செசன்சு கோர்ட் தீர்ப்பு வழங்கியது. தூத்துக்குடி மாவட்டம் அரசூர், பூச்சிக்காடு பகுதியில் 2013 ல் கோயில் திருவிழா நடந்தது. திருவள்ளூர் மாவட்டம் சாமிரெட்டிகண்டிகை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கேசவன் மகன் ராகவன், 15, கோயில் திருவிழாவிற்காக …

Read More »

மணல் மேடால் திணறும் மணப்பாடு மீனவர்கள்- தூண்டில் பாலம் அமைக்க கோரிக்கை

ஜூலை 21, 2015 மணப்பாடு கடலில் திடீரென தோன்றிய மணல் மேடால் மீனவர்கள் படகை கடலுக்கு கொண்டு செல்ல முடியாமல் திண்டாடி வருகின்றனர். அதை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. உடன்குடி அருகே மணப்பாடு கடற்கரை கிராமத்தில் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மணப்பாடு கடல் எபபோதும் தென் பகுதியில் ஆவேசமாகவும், வடபகுதியில் அமைதியாகவும் காணப்படும். வருடத்தின் சில மாதங்கள் கடலின் வடபுறம் …

Read More »

சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவக்கம் களக்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு

ஜூலை 20, 2015 களக்காடு, : சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவங்கப்பட்டுள்ளதால் களக்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.களக்காடு வழித்தடத்தில் வள்ளியூர், பாபநாசம், தென்காசி, புளியங்குடி, நாகர்கோவில் டெப்போக்களை சேர்ந்த அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை என்பதே பயணிகளின் புகாராக உள்ளது.நாகர்கோவில் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், குறிப்பிட்ட நேரங்களில் களக்காடு பஸ் நிலையத்தில் …

Read More »

சாத்தான்குளம் வங்கியில் கொள்ளை முயற்சி: கடன் வாங்கிய வங்கியிலேயே கைவரிசை காட்ட முயன்ற வாலிபர்கள்

ஜூலை 20, 2015 தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம்–இட்டமொழி மெயின்ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது.நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகையை யொட்டி வங்கி மூடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை அங்கு வந்த 3 மர்மநபர்கள் வங்கியின் நுழைவு பகுதியில் இருந்த கண்காணிப்பு காமிராவுக்கு செல்லும் வயரை துண்டித்ததோடு, அங்கிருந்த அலாரம் கருவியை பிடுங்கி எறிந்தனர். பின்னர் வங்கியின் முன்புறம் உள்ள இரும்பு கதவை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த பணத்தை கொள்ளையடிக்க …

Read More »

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெற தரம்பிரித்தல் முகாம் 22–ந் தேதி தொடங்குகிறது

ஜூலை 18, 2015 தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெறுவதற்கான தரம்பிரித்தல் முகாம் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:– தரம்பிரித்தல் முகாம் 2015–16–ம் நிதியாண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவில் தகுதியான சுய …

Read More »

தந்தை சித்ரவதையால் வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் சாத்தான்குளம் அருகே மீட்கப்பட்டனர்

ஜூலை 16, 2015 நாகர்கோவில் வடசேரி பகுதியை சேர்ந்தவர் ராஜ் குமார். இவரது மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு பிரவீன் (வயது12), நவீன் (12) என்ற 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜ்குமார் 2–வது திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் 2–வது திருமணம் செய்த ராஜ்குமார் தனது முதல் மனைவியின் குழந்தைகளான பிரவீன், …

Read More »

மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டில் ஈடுபட்ட 2 பேர் கைது

ஜூலை 16, 2015 மெஞ்ஞானபுரம் அருகே தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் 15 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர் திருட்டுகள் திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம், சாத்தான்குளம், நாசரேத், தட்டார்மடம் பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு வழிப்பறி, திருட்டு சம்பவங்கள் நடந்தன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் எம்.கோட்னிஸ் உத்தரவின் பேரில், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு கனகராஜ் மேற்பார்வையில், மெஞ்ஞானபுரம் …

Read More »

திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் ரூ.1.19 கோடியில் திட்டப்பணிகள் அடிக்கல் நாட்டு விழா

ஜூலை 14, 2015 திசையன்விளை நகரப்பஞ்சாயத்தில் மனோஜ்பாண்டியன் எம்.பி. நிதியில் இருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்.சி. தொடக்கப்பள்ளி கட்டிட அடிக்கல் நாட்டு விழா, நகரப்பஞ்சாயத்து பொது நிதியில் இருந்து ரூ.70 லட்சத்தில் குடிநீர் குழாய் விஸ்தரிப்பு மற்றும் தார் சாலை, சிமெண்டு ரோடு அமைப்பது, ரூ.15 லட்சம் செலவில் தமிழக அரசின் சிறப்பு திட்டம் மூலம் திசையன்விளையில் இருந்து முருகேசபுரம் வரை குடிநீர் குழாய் மற்றும் இரும்பு மூடி …

Read More »

ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலைச் செடிகள் மட்டும் அகற்றம்; இன்னும் மணல் அள்ளப்படவில்லை கலெக்டரிடம் புகார் மனு

ஜூலை 14, 2015 ஸ்ரீவைகுண்டம் அணையில் அமலை செடிகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. இன்னும் மணல் அள்ளப்படவில்லை என்று தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு பேரவை அமைப்பாளர் நயினார் குலசேகரன் மனு கொடுத்து உள்ளார். குறைதீர்க்கும் நாள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று காலை கலெக்டர் ம.ரவிகுமார் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி சப்–கலெக்டர் கோபாலசுந்தரராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு கொடுத்தனர். …

Read More »

நெல்லை அருகே பரபரப்பு தனியார் ஏடிஎம் இயந்திரத்தில் கொட்டிய கள்ளநோட்டுகள் மையத்திற்கு போலீசார் பூட்டு

ஜூலை 13, 2015 திசையன்விளை: நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே இட்டமொழி மெயின் பஜாரில் டாட்டா இண்டிகேஷ் ஏடிஎம் மையம் உள்ளது. இதனை இப்பகுதியில் உள்ள விஜய அச்சம்பாடு, பண்டாரபுரம், பெரும்பனை, அழகப்பபுரம், சங்கரன்குடியிருப்பு, புதூர் உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நேற்று காலை இந்த ஏடிஎம் மையம் அருகில் செல்போன் கடை வைத்திருக்கும் அதே ஊரை சேர்ந்த சங்கரலிங்கம் என்பவர் ஆயிரம் ரூபாய் எடுத்தார். …

Read More »