செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / 2015 / மார்கழி

Monthly Archives: மார்கழி 2015

குளத்து நீர் வெளியேறி சாலையில் தேக்கம்: பெரியதாழை – திசையன்விளை சாலை துண்டிப்பு

சாத்தான்குளம் அருகே குளத்திலிருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் தேங்கியதால், பெரியதாழை – புத்தன்தருவை, திசையன்விளை செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழையிலிருந்து செட்டிவிளை, அதிசய மணல் மாதா ஆலயம், புத்தன்தருவை வழியாக திசையன்விளை செல்லும் சாலை உள்ளது. சடையனேரி கால்வாய் மற்றும் கருமேனி ஆற்று படுகை மூலம் புத்தன்தருவை குளத்துக்கு தண்ணீர் வந்து, தற்போது குளம் நிரம்பி வருகிறது. குளத்துக்கரை வலுவில்லாமல் காணப்படுவதால் வெளியாகும் தண்ணீர் …

Read More »

திசையன்விளை கோல்டு ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

கிறிஸ்துமஸ் விழா திசையன்விளை கோல்டு ஸ்டார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில் பள்ளி தாளாளர் கணேசன் தலைமை தாங்கினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சுயம்பு ஈஸ்வரி, துணை முதல்வர் சுகாசினி, தலைமை ஆசிரியர் திவ்யா ஆகியோர் செய்து இருந்தனர். நன்றி: தினத்தந்தி

Read More »

தாது மணல்: கலால் வரி விலக்கு அளிக்க பரிசீலிக்கும் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை

வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு தாது மணலுக்கான கலால் வரி விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்க உயர் நீதிமன்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு, இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இடைக்காலத் தடை விதித்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை கீரைக்காரன்தட்டுப் பகுதியில் செயல்பட்டு வரும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு, கலால் வரி ஆணையர் 2014 டிசம்பர் 24இல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2011 மார்ச் 1 முதல் 2014 மார்ச் 31 வரை மேற்படி நிறுவனம் எடுத்துள்ள தாது …

Read More »

மழை ஓய்ந்த பிறகும் வடியாத வெள்ளம் தண்ணீரில் மூழ்கிய மணிநகர் தரைப்பாலம்: போக்குவரத்து துண்டிப்பு; 20 கிராம மக்கள் தவிப்பு

கருமேனியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி மணிநகர் தரைப்பாலத்தை முழ்கடித்துச் செல்வதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு சுமார் இருபது கிராம மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர். அண்மையில் பெய்த மழையால் உடன்குடி அருகேயுள்ள சடையநேரி குளம், தாங்கை குளம் ஆகிய குளங்கள் முழுமையாக நிரம்பி மறுகால் பாய்ந்தது. தாங்கைகுளத்தின் உபரிநீர் கருமேனியாற்றில் கலந்து மணிநகர் தரைப்பாலம் வழியாக மணப்பாடு கடலில் கலக்கிறது. இந்நிலையில், கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் தண்ணீர் தடைபட்டு தேங்கும்நிலை ஏற்பட்டுள்ளதால், மணிநகர் பகுதியிலுள்ள …

Read More »

தலைமறைவான திசையன்விளை இட்டமொழி சுவிஷேசபுரத்தைச்சேர்ந்த திருமணபு ரோக்கர் ஜான் இன்பராஜ்

ஆசிரியை, நர்ஸ் உள்ளிட்ட 5 பேரை ஏமாற்றி திருமணம் செய்த காதல் மன்னன் புதுக்கோட்டையில் பிடிபட்டார். தலைமறைவான புரோக்கரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தூத்துக்குடி தபால், தந்தி காலனி 4வது தெருவைச்சேர்ந்த ரத்தினசாமி மகள் எஸ்தர்பாலா(38). ஆசிரியை பயிற்சி முடித்துள்ளார். இவரது கணவர் 2010ம் ஆண்டு இறந்துவிட்டதால் இவர் பெற்றோருடன் வசித்து வந்தார். உறவினர்கள் அவரை மறுமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதால் …

Read More »

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், …

Read More »

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், …

Read More »

நதியை எப்போதும் அநீதியால் அடைக்க முடியாது

திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட் டங்களுக்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. ஒன்று பசுமை யானது. தாமிரபரணி தரும் செழிப்பு அது. மற்றொன்று ரத்தச் சிவப்பு. தேரி நிலங்களாக விரியும் சிவப்புப் பாலை அது. பசுமை விளையாதத் தரிசு அது. ஒரு பக்கம் ஓடும் ஆற்றில் கையில் அள்ளி தண்ணீர் குடிக்கிறார்கள். மறுபக்கம் நிலத்தடியை ஆழத் தோண்டினாலும் மணல்தான் மிஞ்சு கிறது. இயற்கையின் வினோதங்களில் இதுவும் ஒன்று. திருநெல்வேலியின் நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடியின் …

Read More »

திசையன்விளையில் அதிமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

திசையன்விளை, : நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் அதிமுக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்கியும், ராதாபுரம் தொகுதியில் நடந்துள்ள  வளர்ச்சி பணிகளை விளக்கியும் திசையன்விளை பழைய பஸ் நிலையத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. நெல்லை புறநகர் மாவட்ட ஜெ. பேரவை தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் ஜெயபால், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் பாலன், நகர செயலாளர் சுடலைமணி, …

Read More »