தட்டார்மடம் அருகே மனைவியை கழுத்தை அறுத்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி கோர்ட்டில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. கட்டிட காண்டிராக்டர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தேரியூரை சேர்ந்தவர் ராகவன். இவருடைய மகன் சுதாகர் (வயது 33), கட்டிட காண்டிராக்டர். இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (25) என்பவருக்கும் கடந்த 29-05-13 அன்று திருமணம் நடந்தது. சுதாகருக்கு அவருடைய அத்தை மகளுடன் பழக்கம் இருந்து வந்தது. அதே …
Read More »Monthly Archives: பங்குனி 2016
திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் : வனத்துறையினரின் புது ‘கரடியால்’ மக்கள் குழப்பம்
திசையன்விளை: திசையன்விளை அருகே கிராமத்தில் புகுந்தது சிறுத்தை அல்ல, கிரேடன் ரக நாய் என்று வனத்துறையினர் திசை திருப்புவதால் பொதுமக்கள் குழப்பத்தில் தவிக்கின்றனர். திசையன்விளை அருகே வாகைநேரியில் கடந்த 1ம் தேதி அதிகாலை விவசாயி மலையாண்டி என்பவரது தொழுவத்துக்கு குட்டியுடன் சிறுத்தை வந்தது. அங்கிருந்து அந்த சிறுத்தை ரோட்டை கடந்து செல்லும் போது அதே ஊரை சேர்ந்த கருப்பசாமி என்பவர் பார்த்ததாக கூறினார். மறுநாள் கருப்பசாமியின் மாமியார் பேச்சியம்மாள் மாடுகளுக்கு …
Read More »திருச்செந்தூரில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா கோலாகலம்
அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடந்தது. இதையொட்டி திருச்செந்தூர் அவதாரபதியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். அய்யா வைகுண்டர் அவதார தின விழா அய்யா வைகுண்டர் 184-வது அவதார தின விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டரின் அவதாரபதியில், அய்யா வைகுண்டர் அவதார தின விழா கடந்த 2 நாட்கள் நடந்தது. …
Read More »திசையன்விளை பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள்
நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதியில் குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியை பிடிக்க 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சுற்றித்திரியும் சிறுத்தை நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள வாகநேரி, இட்டமொழி பகுதிகளில் குட்டியுடன் சுற்றித்திரியும் சிறுத்தைப்புலியால், அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்பட்டு இருக்கிறது. சிறுத்தை அடித்துவிடக் கூடாது என்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடாமல் வீடுகளின் அருகிலேயே கட்டிப்போட்டு கண்காணித்து வருகின்றனர். இரவில் வீடுகளில் மின்விளக்குகளை எரியவிட்டு …
Read More »சாமிதோப்பில் இன்று அய்யா வைகுண்டர் அவதார தினம்
சாமிதோப்பில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா வியாழக்கிழமை (மார்ச் 3) கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மாசி 20 ஆம் தேதி அவதார தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டு இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் கடற்கரையில் உள்ள அய்யா பதியில் இருந்து புதன்கிழமை (மார்ச் 2) சாமிதோப்பு தலைமைப்பதி நிர்வாகி சாமி தலைமையில் பேரணி புறப்பட்டது. இந்த வாகனப் பேரணி திருச்செந்தூர், திசையன்விளை, உடன்குடி, …
Read More »திசையன்விளை பகுதியில் சிறுத்தை நடமாட்டம்? வனத் துறையினர் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வனத் துறையினர் சென்று பதிவாகியிருந்த விலங்கின் கால் தடத்தைப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். திசையன்விளையை அடுத்த இட்டமொழி அருகே உள்ள வாகைனேரியைச் சேர்ந்தவர் மலையாண்டி. மாடு மேய்க்கும் தொழிலாளி. இவரது வீட்டு மாட்டுத் தொழுவத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாய் குரைக்கும் சப்தம் கேட்டதாம். அவர் வெளியே வந்தபோது, தொழுவத்தில் இருந்து சிறுத்தை போன்ற …
Read More »