செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / 2018 / பங்குனி

Monthly Archives: பங்குனி 2018

திருச்செந்தூர் தொகுதியில் பழுதான சாலைகளை சீரமைக்க எம்எல்ஏ கோரிக்கை

திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் பழுதான சாலைகளைச் சீரமைக்க வேண்டும் என அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக தூத்துக்குடி நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளர் பாலசுப்பிரமணியனிடம் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த மனு விவரம்: திருச்செந்தூர் பேரவைத் தொகுதிக்குள்பட்ட சாலைகள் பெரும்பாலும் பழுதடைந்த நிலையில் உள்ளன. தூத்துக்குடி-திருச்செந்தூர், கன்னியாகுமரி-திருச்செந்தூர், திருநெல்வேலி-திருச்செந்தூர் சாலைகளின் இணைப்பு பகுதிகள் பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றன. முருகன்குறிச்சி- பிச்சிவிளை-சீர்காட்சி- உடன்குடி சாலை, திருச்செந்தூர்- …

Read More »

திசையன்விளை மனோ கல்லூரி கட்டடப் பணி: எம்.எல்.ஏ. ஆய்வு

திசையன்விளை மனோ கல்லூரியில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் கட்டடப் பணிகளை ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ. பார்வையிட்டார். திசையன்விளையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக கலை மற்றும் அறிவியல் கல்லூரி தனியார் வணிக வளாகத்தில் வாடகை இல்லாமல் இயங்கி வருகிறது. இக்கல்லூரிக்கு சொந்தமாக கட்டடம் கட்ட முன்னாள் எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பன் நந்தன் குளத்தில் தனக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கி இருந்தார். இந்நிலையில் இன்பதுரை எம்.எல்.ஏ. …

Read More »

உடன்குடியில் சத்ருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு வரவேற்பு

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் நடைபெரும் ச்தருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் நீங்கவேண்டும் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இருந்து வேல் ரதம் பவனி வருகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் புறப்பட்ட சத்ருசம்ஹார வீரவேல் ரதத்தினை தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலர் இரா. சிவமுருக ஆதித்தன் உள்ளிட்டோர் உடன்குடியில் வரவேற்றனர். இந்த ரதம் …

Read More »

சாத்தான்குளத்தில் பணிமனையை மாற்ற எதிர்ப்பு: வட்டாட்சியரிடம் மனு

சாத்தான்குளம் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனையை வேறு பணிமனையுடன் இணைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக எழுந்த புகாரை அடுத்து, இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வட்டாட்சியரிடம் சனிக்கிழமை மனு அளித்தனர். திருநெல்வேலிலி கோட்டம், தூத்துக்குடி மண்டலம் சாத்தான்குளத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமனை கடந்த ஆண்டு மார்ச் 8 அம் தேதி தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறந்துவைக்கப்பட்டது. அப்போது பணிமனை மேலாளர் உள்ளிட்ட சில ஊழியர்களும், 3 பேருந்துகளும் …

Read More »

6 ஆண்டுகளாக நிதி ஒதுக்கியும் அரை அடி பணி கூட நடக்கவில்லை:தவியாய் தவிக்கிறது தாமிரபரணி கால்வாய்

திருநெல்வேலி:தாமிரபரணி– நம்பியாறு வெள்ளநீர் கால்வாய் திட்டத்திற்கு கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 300 கோடி ரூபாயில் முறையாக செலவழிக்காத நிலையில் இந்த ஆண்டும் 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படுவதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி தண்ணீர் நெல்லை, துாத்துக்குடி மாவட்டங்களின்விவசாயம், குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. நவம்பர், டிசம்பரில் வெள்ள நீர் வீணாக கடலுக்கு செல்கிறது. இதை தடுத்து வறட்சி பகுதியான திசையன்விளை, நாங்குநேரியில் சுமார் 42 ஆயிரம் ஏக்கர் பயன்பெறும் …

Read More »

108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையில் 108 ஆம்புலன்ஸில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது. திசையன்விளை நெடுவிளை தெருவைச் சேர்ந்தவர் பெயின்டர் கணேசன். இவரது மனைவி சேர்மக்கனி (26). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார். ஆம்புலன்ஸ் …

Read More »

புயல் காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் 4,600 படகுகள் கடலுக்கு செல்லவில்லை..

புயல் எச்சரிக்கை காரணமாக தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் சுமார் 4,600க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. தென்மேற்கு வங்க கடலில், இலங்கையின் தெற்கு பகுதியில் புயல் மையம் கொண்டுள்ளது. இது குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் வாய்ப்பு உள்ளதால், தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதையடுத்து கடந்த 3 நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் படகுகள் …

Read More »

திசையன்விளை பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.திசையன்விளை அருகே உள்ள வடக்கு பெட்டைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ராஜகுமாரி (29). இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் 3 வது பிரசவத்திற்காக திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு …

Read More »

பெண்ணிடம் நகைப் பறிப்பு

திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி சாந்தகுமாரி (40).  இவர்,  தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொருள் வாங்குவது போல் நடித்து சாந்தகுமாரியின்  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.   நன்றி: தினமணி

Read More »

'தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை' - நெல்லையில் சோகம்!

நெல்லையில் டாஸ்பாக் பார் உரிமையாளர் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலாந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். 55 வயது நிரம்பிய இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே தொழில் வாய்ப்புக்காக சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு ரியல் எஸ்டேட் மற்றும் பணம் …

Read More »