குடும்பத்தினரின் வாழ்வாதாரத்தைக் காக்க நாடோடி வாழ்க்கை வாழ்ந்து இனிப்பு பொருள்களை தயாரித்து மக்களுக்கு விநியோகித்தாலும், மூலப்பொருள்களின் கடும் விலையேற்றத்தால் தங்களது வாழ்க்கை இனிக்காத சூழலிலேயே உள்ளதாக திருவிழா வியாபாரிகள் கவலை தெரிவிக்கிறார்கள். தென்தமிழகத்தில் நடைபெறும் அனைத்து இந்து கோயில்கள், கிறிஸ்தவ தேவாலயங்கள், தர்கா விழாக்களிலும் திருவிழா இனிப்பு கடைகள் மிகவும் பிரசித்தம். காரச்சேவு, இனிப்புச்சேவு, பூந்தி, லட்டு ஆகியவை மட்டுமன்றி “ஏணி மிட்டாய்’ என அழைக்கப்படும் சீனி, கருப்புக்கட்டி மிட்டாய்கள் …
Read More »Monthly Archives: சித்திரை 2018
நம்பியாற்றில் மணல் கடத்திய இருவர் கைது
திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்தியதாக இருவரை போலீஸார் கைது செய்து, 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர். திசையன்விளை அருகே நம்பியாற்றில் பைக்கில் மணல் கடத்துவதாக திசையன்விளை போலீஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில், உதவி ஆய்வாளர் சத்யா மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவ்வழியாக மணல் கடத்திய அணைக்கரையைச் சேர்ந்த குயின்ராஜ் (35), சேகர் (36) ஆகிய இருவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 பைக்குகளையும் …
Read More »கடற்கரை மண்டல மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டம்: மீனவ மக்கள் புறக்கணிப்பு உவரியில் பரபரப்பு
உவரியில் நேற்று நடைபெற இருந்த கடற்கரை மேலாண்மை திட்ட வரைவு கருத்து கேட்பு கூட்டத்தை மீனவ மக்கள் புறக்கணித்து வெளியேறினர். இதனால் கூட்டம் ரத்து செய்யப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திசையன்விளை, கருத்து கேட்பு கூட்டம் நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் ஆகியவை சார்பில், நெல்லை மாவட்டத்திற்கான 9 முதல் 13 வரையிலான வரைபடங்கள் மற்றும் அதை சார்ந்த கடற்கரை மண்டல வகைகள் வரைவு, …
Read More »தாமிரவருணி வெள்ளநீர் கால்வாய் 3-ஆம் கட்டப் பணி தொடக்கம்: ஆட்சியர், எம்.எல்.ஏ. ஆய்வு
தாமிரவருணி வெள்ளநீர் கால்வாயின் 3-ஆம் கட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ள பகுதியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ்.இன்பதுரை ஆகியோர் புதன்கிழமை ஆய்வு செய்தனர். தாமிரவருணி ஆற்றுடன் கருமேனி ஆறு, நம்பியாறு ஆகிய ஆறுகளை இணைக்கும் வெள்ளநீர் கால்வாய் திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த வெள்ளநீர் கால்வாயில் முதல் 2 கட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. 3-ஆம் கட்டப் பணிகள் நான்குனேரி வட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள …
Read More »அதிமுக வழக்குரைஞரணி ஆலோசனைக் கூட்டம்
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக வழக்குரைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பாளையங்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அணியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் கே.எம்.எஸ். பீர்முகைதீன் தலைமை வகித்தார். கட்சியின் மாநகர் மாவட்ட அவைத் தலைவர் பரணி ஏ. சங்கரலிங்கம், பொருளாளர் தச்சை ந. கணேசராஜா, பகுதிச் செயலர் எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கட்சியின் அமைப்புச் செயலர்கள் பி.எச். மனோஜ்பாண்டியன், சுதா கே. பரமசிவன், வழக்குரைஞர் …
Read More »மரத்தில் லாரி மோதியது; வியாபாரி உள்பட 2 பேர் காயம்
இட்டமொழி அருகே மரத்தில் லாரி மோதிய விபத்தில் நெல் வியாபாரி உள்பட 2 பேர் காயமடைந்தனர். நெல்லை மாவட்டம் இட்டமொழி அருகே பெரும்பனையை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் (வயது 50), நெல் வியாபாரி.இவர் சம்பவத்தன்று தனக்கு சொந்தமான மினிலாரியில் விவசாயிகளிடமிருந்து வாங்கிய நெல் மூடைகளை பாவூர்சத்திரத்தில் இறக்கிவிட்டு லாரியில் தனது வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். லாரியை இட்டமொழி அருகே உள்ள மனகாவலபுரத்தை சேர்ந்த சாந்தகுமார் (40) ஓட்டினார். லாரி, இட்டமொழி அருகே …
Read More »காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நெல்லை மாவட்டத்தில் ரயில், சாலை மறியல்: 555 பேர் கைது
காவிரிமேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்தும், உடனடியாக காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்தியகம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்ப் புலிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் புதன்கிழமை ரயில், சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தென்காசியில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பி.எஸ்.எஸ்.போஸ் …
Read More »திசையன்விளை அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு
திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை உயிரிழந்தார். நான்குனேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர் திசையன்விளை அருகில் உள்ள தச்சன்விளை கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை வேனில் ஊர் திரும்பினர். திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமம் அருகே எதிரே வந்த கார் வேனுடன் நேருக்கு நேர் மோதி வேன் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த …
Read More »திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். திசையன்விளை, வேன்– கார் மோதல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் …
Read More »திசையன்விளை அருகே வேன்–கார் மோதல்; 7 பேர் காயம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
திசையன்விளை, திசையன்விளை அருகே வேனும், காரும் மோதிக் கொண்ட விபத்தில் 7 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். வேன்– கார் மோதல் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர், தூத்துக்குடி மாவட்டம் தச்சன்விளையில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று அதிகாலை வேனில் ஊர் திரும்பி வந்து கொண்டிருந்தனர். திசையன்விளை அருகே உள்ள வாழைத்தோட்டம் கிராமத்தின் அருகே …
Read More »