Breaking News

கோவில்கள்

Ut wisi luctus ullamcorper. Et ullamcorper sollicitudin elit odio consequat mauris, wisi velit tortor semper vel feugiat dui, ultricies lacus. Congue mattis luctus, quam orci mi semper

மகா புஷ்கர விழா: பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் ஓ.பன்னீர்செல்வம் புனித நீராடினார்

தாமிரபரணி மகா புஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவை கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா என்பதால் தாமிரபரணி ஆற்றில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் புனித நீராடி வருகின்றனர். இதேபோல் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் தாமிரபரணியில் புனித நீராடி செல்கின்றனர். நேற்று தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் புனித …

Read More »

குலசை தசராவில் மகிஷாசூர வதம்...! லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

தசரா திருவிழாவை முன்னிட்டு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் மகிஷாசூரசம்ஹாரம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் “ஓம் காளி… ஜெய் காளி” என விண்ணை முட்ட கோஷம் எழுப்பி சுவாமி தரிசனம் செய்தனர். இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் குலசேகன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்குள்ள ஞானமூர்த்தீஸ்வரர் உடணுறை அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்த திருவிழா நாள்களில் தினமும் காலையில் அபிஷேகம் மற்றும் …

Read More »

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

திசையன்விளை, திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவிலில் மஞ்சள் பெட்டி ஊர்வலம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுடலை ஆண்டவர் கோவில் நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்கு தெருவில் உள்ளது சுடலை ஆண்டவர் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் கொடை விழா வெகுவிமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டிற்கான கொடைவிழா கடந்த 19–ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் விளையாட்டு போட்டிகள், கோலப்போட்டி, சமய …

Read More »

உடன்குடியில் சத்ருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு வரவேற்பு

இந்து ஆலயங்கள் மீட்பு இயக்கம் சார்பில் நடைபெரும் ச்தருசம்ஹார வீரவேல் ரதத்திற்கு உடன்குடியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழகத்தில் ஜாதி, மத, மொழி வேறுபாடுகள் நீங்கவேண்டும் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இருந்து வேல் ரதம் பவனி வருகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் புறப்பட்ட சத்ருசம்ஹார வீரவேல் ரதத்தினை தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலர் இரா. சிவமுருக ஆதித்தன் உள்ளிட்டோர் உடன்குடியில் வரவேற்றனர். இந்த ரதம் …

Read More »

திசையன்விளை “உலக ரட்சகர் ஆலயம்” வழிபாட்டிற்கு திறப்பு!

நெல்லை மாவட்டம் திசையன்விளையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உலக ரட்சகர் ஆலயத்தை, தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் அர்ச்சித்து திறந்து வைத்தார். திசையன்விளையில் உலக ரட்சகர் புதிய ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா, கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் திருப்பலியை நிறைவேற்றி, புதிய கொடிமரத்தை அர்ச்சித்து கொடியேற்றி வைத்தார். தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் நற்கருணை ஆசீரும் நடைபெறுகிறது. நேற்று, …

Read More »

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளானவர்கள் பங்கேற்பு

திசையன்விளை, திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் கலந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற தர்காக்களில், நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே அமைந்துள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), அவரது கணவர் ஹசரத் சேகு முகமது (ஒலி) ஆகியோர் தர்காவாகும். ஆண்டுதோறும் இங்கு கந்தூரி …

Read More »

உவரியில் அபூர்வ நிகழ்ச்சி சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்தது திரளான பக்தர்கள் தரிசனம்

திசையன்விளை, உவரியில் அபூர்வ நிகழ்ச்சியாக சுயம்புலிங்க சுவாமி கோவிலில் மூலவர் மீது சூரியஒளி விழுந்த அதிசயம் நேற்று நடந்தது. இதனை திரளான பக்தர்கள் பார்த்து சுவாமி தரிசனம் செய்தனர். சுயம்புலிங்க சுவாமி நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இக்கோவிலில் சுவாமி சுயம்புவாக தோன்றி அருள் புரிந்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் மட்டும் மூலவர் மீது சூரியஒளி …

Read More »

முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா: திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரம்

திசையன்விளை, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு திசையன்விளையில் தசரா பொருட்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. தசாரா திருவிழா தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் குலசேரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலும் ஒன்று ஆகும். இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறும். திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின்போது ஆயிரக்கணக்கான …

Read More »

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி திரளான பெண்கள் கலந்து கொண்டனர்

திசையன்விளை சுடலை ஆண்டவர் கோவில் கொடை விழாவில் கோலப்போட்டி நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். கோவில் கொடை விழா நெல்லை மாவட்டம் திசையன்விளை வடக்குத்தெரு சுடலை ஆண்டவர் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் முதல் வாரத்தில் கொடை விழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான கொடை விழா நேற்று காலையில் தொடங்கியது. இந்த கொடைவிழா வருகிற 26–ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது. கோலப்போட்டி கொடை விழாவையொட்டி …

Read More »

மனதை செம்மையாக்கும் மனோன்மணீஸ்வரர் : விஜயநாராயணம்

விஜயநாரயணம் மனோன்மணீஸ்வர் ஆலயம் பஞ்ச கயிலாயத்தில் கடைசி க்ஷேத்ரமாக போற்றப்படுகிறது. கயிலையில் பார்வதி தேவி உலக நலத்திற்காகச் சிவபெருமானைத் தியானித்தார். தனது கையில் வைத்திருந்த 1008 தாமரைப் புஷ்பங்களை பூமியில் தூவினாள். அந்த புஷ்பங்களைச் சிவபெருமான் 1008 இடங்களில் லிங்க வடிவில் தோன்றி ஏற்றுக்கொண்டு அங்கேயே அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அந்த இடங்களெல்லாம் 1008 சிவக்ஷேத்ரங்களாக போற்றப்படுகின்றன. இதில் 74வது க்ஷேத்ரமாக மனோன்மணி என்னும் லிங்கம் அமைந்த விஜயநாராயணம் போற்றப்படுகிறது. …

Read More »