செவ்வாய் , புரட்டாதி 26 2023
Breaking News
Home / Uncategorized

Uncategorized

நெல்லை மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கல்வி தகுதியை பட்டப்படிப்பாக மாற்றிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கிளை நிர்வாகிகள் …

Read More »

பைக் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் சாவு

திசையன்விளை அருகே மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து அஸ்ஸாம் இளைஞர் உயிரிழந்தார். திசையன்விளை அருகேயுள்ள ஆயன்குளத்தைச் சேர்ந்தவர் பட்டுராஜா. இவரது, வீட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க, அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நண்பரான பரத்சிங் கவுல் மகன் கோசின் கவுல் (24) ஞாயிற்றுக்கிழமை காலை ஆயன்குளம் வந்துள்ளார். பின்னர், அவர் மோட்டார் சைக்கிளில் திசையன்விளைக்குச் சென்றுவிட்டு திரும்பி வந்தபோது, ஆயன்குளம் திருப்பத்தில் எதிர்பாராமல் வாகனம் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த கோசின் கவுல் …

Read More »

தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் மீண்டும் மாயம்: ஆசிரியர்கள், மக்கள் கடும் அவதி

தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் மீண்டும் மாயம்: ஆசிரியர்கள், மக்கள் கடும் அவதி நாசரேத்: தூத்துக்குடியில் இருந்து நாசரேத் வழியாக உவரி செல்லும் அரசு பஸ் அடிக்கடி மாயமாவதால் ஆசிரியர்கள், பொதுமக்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர். தூத்துக்குடியில் இருந்து தினமும் காலை 5.15 மணிக்கு தடம் எண் 145 எஸ்.எப்.எஸ். அரசு பஸ் புறப்பட்டு புதுக்கோட்டை செபத்தையாபுரம், சாயர்புரம், ஏரல், நாசரேத், சாத்தான்குளம், இட்டமொழி, திசையன்விளை …

Read More »

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் சாவு திசையன்விளை அருகே சோகம்

திசையன்விளை, திசையன்விளை அருகே, கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவியும் இறந்தார். கணவர் சாவு நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நவ்வலடியை சேர்ந்தவர் ஆண்டி நாடார் என்ற மகாலிங்கம் (வயது 83). அவருடைய மனைவி அபூர்வ மணி (76). இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். 2 மகன்கள் நவ்வடியிலும், 3 மகன்கள் சென்னையிலும் வசித்து வருகின்றனர். மகள் திசையன்விளையில் வசித்து வருகிறார். நவ்வலடியில் தனித்தனி வீடுகளில் …

Read More »

பொய்வழக்குப் போட்டதாக காவல்நிலையத்தில் விஷம் குடித்தவர் பலி..!!

ஆடு வளர்ப்பது தொடர்பான பிரச்சனையும், கொடுக்கல் வாங்கல் தகராறும் இருக்க ஆட்டுவியாபாரிக்கு சாதகமாக பொய் வழக்குப் போட்டு சிறைக்கு அனுப்பிய காவல்துறையை கண்டித்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திலேயே விஷம் அருந்திய வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியானார். நெல்லை மாவட்டம் திசையன்விளை இடையன்குடி சாலைப் பகுதியை சேர்ந்த ஜெனிபர் என்ற வாலிபர், மடத்தச்சம்பாட்டைச் சேர்ந்த செல்லபாண்டி எனும் ஆட்டு வியாபாரிடம் சென்று, தன்னை “குட்டம் போலீஸ்” என அறிமுகப்படுத்தி ரூ.15 ஆயிரம் …

Read More »

திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திசையன்விளை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் திசையன்விளை: திசையன்விளை அருகே முதுமொத்தன்மொழி சாலையில் உள்ள ராதாபாய் நகர் காட்டுப்பகுதியில் இன்று காலை ஒரு ஆண் பிணம் கிடந்தது. இதுபற்றி திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பிணமாக கிடந்தவர் யார்? அவர் எப்படி இறந்தார்? என்பது பற்றி விசாரணை நடத்தப்பட்டது. அவர் நீல கலரில் …

Read More »

ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்த கர்ப்பிணி: பெற்றோர், உறவினர்கள் பரபரப்புக் குற்றச்சாட்டு

நெல்லை மாவட்டம் திசையன்விளை அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறைக் காரணமாக கர்ப்பிணிப் பெண் உயிரிழந்ததாக அவரது பெற்றோரும் உறவினர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழப்புநெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள சீலாத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர், முருகன். இவரது மகள் மாலினி தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு ஏற்கெனவே 3 வயதில் ஒரு குழந்தை உள்ள நிலையில், இரண்டாவது பிரசவத்துக்காக திசையன்விளை அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் …

Read More »

வீணடிக்கப்பட்ட மணிமுத்தாறு அணை பூங்கா: சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

மணிமுத்தாறு அணையின் அடிவாரத்தில உள்ள பூங்காவில், செயற்கை நீரூற்றுகளும், அணையில் இருந்து கசிவு நீர் ஓடி வரும் அழகிய கால்வாய்களும் தூர்ந்து போய் உள்ளன. ஓய்வு அறைகள், காட்சி கோபுரங்கள், விளையாட்டு சாதனங்கள் சேதம் * திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாப் பகுதியாக விளங் கிய மணிமுத்தாறு அணைபூங்கா முறையான பராமரிப்பின்றி வீணடிக்கப்பட்டு விட்டது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற் றத்துடன் திரும்ப நேரிடுகிறது. தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறாக …

Read More »

​இன்றைய இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக ஓரு வாழும் ‘அண்ணாமலை’..!

சென்னை துறைமுகத்தில் தினக்கூலியாக வேலை செய்தவர், இன்று 2500 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளார், அவர் எப்படி இதனை சாதித்தார் என்பதனை சுருக்கமாக பார்ப்போம். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை என்னும் ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் திரு.எம்.ஜி.முத்து, ஏழ்மை காரணமாக பள்ளிக்கு செல்ல இயலாததால், 1952ஆம் ஆண்டு சென்னை துறைமுகத்தில் சாதாரண தினக்கூலி வேலை செய்பவராக தன் வாழ்க்கை தொடங்கினார் முத்து. கப்பல்களில் வரும் சுமைகளை …

Read More »