திருநெல்வேலி, குடிகார கணவர் தகராறு செய்ததால் மனைவி, மகள் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர்.திருநெல்வேலி, திசையன்விளை அருகே வீரணன்சேரியை சேர்ந்தவர் விஜயகுமார் 30.இவரது மனைவி மகாலட்சுமி 28. காதல் திருமணம் செய்துகொண்டனர். விஜயா 9, திவ்யா 8, வெங்கடேஷ் 4 ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தகராறில் ஈடுபடுவாராம்.
வீட்டில் வளர்த்த மாட்டை, மகாலட்சுமி விற்றுள்ளார். அதில் கிடைத்த பணத்தை கேட்டு விஜயகுமார் தகராறுசெய்துள்ளார். மனமுடைந்த மகாலட்சுமி, குருணை மருந்தினை, வாழைப்பழத்தில் மறைத்து தமது குழந்தைகளுக்குகொடுத்து தாமும் சாப்பிட்டுள்ளார். மகள் விஜயா, பழத்தை சாப்பிட மறுத்ததோடு தம்பி வெங்கடேஷை தூக்கிக்கொண்டு ஓடியதால் தப்பினார். விஷம் அருந்திய மகாலட்சுமி, மகள் திவ்யா ஆகியோர் இறந்தனர். திசையன்விளை போலீசார்
விசாரித்தனர்
நன்றி:தினமலர்