Breaking News

திசையன்விளை பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பிரசவம்

திசையன்விளை பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் ஆண் குழந்தை பிறந்தது.திசையன்விளை அருகே உள்ள வடக்கு பெட்டைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி ராஜகுமாரி (29). இவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் 3 வது பிரசவத்திற்காக திசையன்விளை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர், ரத்த அழுத்தம் அதிகமாக இருப்பதால் குழந்தை பிறப்பதில் சிக்கல் இருப்பதாகக் கூறி மேல்சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

ஆம்புலன்ஸ் வாகனம் பொன்னாக்குடி அருகே செல்லும் போது ராஜகுமாரிக்கு பிரசவ வலி அதிகமானதால் வாகனத்தை நிறுத்தி மருத்துவ உதவியாளர் ராஜேஸ்வரி, ஓட்டுநர் உதவியுடன் பிரசவம் பார்த்தார். இதில் ராஜகுமாரிக்கு ஆண் குழந்தை பிறந்தது. பின்னர் தாயையும் குழந்தையையும் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

நன்றி  : தினமலர்

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply