நெல்லை: திசையன்விளை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த நிறைமாத கர்ப்பிணியின் உயிரிழப்புக்கு நீதி விசாரணை நடத்த வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே கும்பிகுளம் நடுவூரை சேர்ந்தவர் மாலினி. இவர் பிரசவத்திற்காக கடந்த 3-ம் தேதி திசையன்விளை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில், குழந்தை பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து நெல்லை ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டதைடுத்து, மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது.
இதனிடையே, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாலினி இறப்பிற்கு நீதி கேட்டு திசையன்விளை பேருந்து நிலையம் அருகில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் இறப்பிற்கு காரணமான மருத்துவரை விசாரணை மேற்கொள்ள வேண்டும். மாலினி குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.
திசையன்விளை அரசு மருத்துவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாலினி பெற்றோர் மற்றும் உறவினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நீதி கேட்டு கோஷங்களை எழுப்பினர்.
நன்றி: eenathu India எங்கும் தமிழ்
