Breaking News

தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெற தரம்பிரித்தல் முகாம் 22–ந் தேதி தொடங்குகிறது

ஜூலை 18, 2015

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார்

தூத்துக்குடி மாவட்டத்தில் கிராமப்புற மகளிர் சுய உதவிக்குழுக்கள் வங்கி கடன் பெறுவதற்கான தரம்பிரித்தல் முகாம் வருகிற 22–ந் தேதி தொடங்குகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

தரம்பிரித்தல் முகாம்
2015–16–ம் நிதியாண்டிற்கு தூத்துக்குடி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.186 கோடி வங்கி கடன் வழங்க குறியீடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார அளவில் தகுதியான சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு வழங்குவதற்கான தரம் பிரித்தல் முகாம்கள் அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்கள் மற்றும் களப்பகுதி அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

உடன்குடி
அதன்படி வருகிற 22–ந் தேதி உடன்குடி வட்டாரத்தைச் சேர்ந்த செட்டியாபத்து களப்பகுதிக்கும், சாத்தான்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த தச்சமொழி களப்பகுதிக்கும், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தைச் சேர்ந்த திருப்புளியங்குடி களப்பகுதிக்கும், கருங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த செய்துங்கநல்லூர் களப்பகுதிக்கும், புதூர் வட்டாரத்தைச் சேர்ந்த மேலக்கரந்தை களப்பகுதிக்கும், கயத்தாறு வட்டாரத்தைச் சேர்ந்த கயத்தாறு களப்பகுதிக்கும், கோவில்பட்டி வட்டாரத்தைச் சேர்ந்த கோவில்பட்டி களப்பகுதிக்கும் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தைச் சேர்ந்த ஓட்டப்பிடாரம் களப்பகுதிக்கும் அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் வைத்து காலை 10 மணிக்கு நடக்கிறது.

திருச்செந்தூர்
29–ந் தேதி திருச்செந்தூர் வட்டாரத்தைச் சேர்ந்த திருச்செந்தூர் களப்பகுதிக்கும், தூத்துக்குடி வட்டாரத்தைச சேர்ந்த கோரம்பள்ளம் மற்றும் குமாரகிரி களப்பகுதிகளுக்கும், ஆழ்வார்திருநகரி வட்டாரத்தைச சேர்ந்த அங்கமங்கலம், மேலஆத்தூர் மற்றும் ஸ்ரீவெங்கடேசபுரம் களப்பகுதிகளுக்கும், புதூர் வட்டாரத்தைச சேர்ந்த புதூர் களப்பகுதிக்கும், கயத்தாறு வட்டாரத்தைச சேர்ந்த வானரமுட்டி களப்பகுதிக்கும், விளாத்திகுளம் வட்டாரத்தைச சேர்ந்த விளாத்திகுளம் களப்பகுதிக்கும் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தைச் சேர்ந்த ஒட்டநத்தம் களப்பகுதிக்கும் அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் வைத்து காலை 10 மணிக்கு நடக்கிறது.

1–ந் தேதி
1–ந் தேதி உடன்குடி வட்டாரத்தைச சேர்ந்த மெஞ்ஞானபுரம் களப்பகுதிக்கும், சாத்தான்குளம் வட்டாரத்தைச சேர்ந்த நடுவக்குறிச்சி களப்பகுதிக்கும், ஸ்ரீவைகுண்டம் வட்டாரத்தைச சேர்ந்த சிறுதொண்டாநல்லூர் களப்பகுதிக்கும், கருங்குளம் வட்டாரத்தைச சேர்ந்த வல்லநாடு களப்பகுதிக்கும் அந்தந்த களப்பகுதி அலுவலகங்களில் வைத்து காலை 10 மணிக்கு நடக்கிறது.

புதூர் வட்டாரத்தைச சேர்ந்த நாகலாபுரம் களப்பகுதிக்கும், கயத்தாறு வட்டாரத்தைச சேர்ந்த காமநாயக்கன்பட்டி களப்பகுதிக்கும், கோவில்பட்டி வட்டாரத்தைச சேர்ந்த இளையரசனேந்தல் களப்பகுதிக்கும் மற்றும் ஓட்டப்பிடாரம் வட்டாரத்தைச சேர்ந்த பசுவந்தனை களப்பகுதிக்கும் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வைத்து காலை 10 மணிக்கு நடக்கிறது.

5–ந் தேதி
5–ந் தேதி கோவில்பட்டி வட்டாரத்தைச சேர்ந்த எட்டயபுரம் களப்பகுதிக்கும், ஓட்டப்பிடாரம் வட்டாரத்தைச சேர்ந்த குறுக்குச்சாலை களப்பகுதிக்கும் மற்றும் விளாத்திகுளம் வட்டாரத்தைச சேர்ந்த குளத்தூர் மற்றும் சிவஞானபுரம் களப்பகுதிகளுக்கும் அந்தந்த பஞ்சாயத்து யூனியன் அலுவலகங்களில் வைத்து காலை 10 மணிக்கு நடக்கிறது.

இந்த முகாமில் உதவி திட்ட அலுவலர்கள் (மகளிர் திட்டம்) மற்றும் உதவி திட்ட மேலாளர்கள் (புதுவாழ்வு) கலந்து கொண்டு குழுக்களின் பதிவேடுகளை ஆய்வு செய்து தரம் பிரித்தல் பணிகளை மேற்கொள்வார்கள். ஆகையால் அந்தந்த தேதிகளில் தகுதியான சுய உதவிக் குழுக்களின் ஊக்குநர் மற்றும் பிரதிநிதிகள் மேற்படி தரம் பிரித்தல் ஆய்வு முகாமில் காலை 10 மணிக்கு தீர்மானப் புத்தகம், கடன் பதிவேடு, ரொக்கப் புத்தகம், தனிநபர் கடன் சேமிப்புப் பதிவேடு, பொதுப் பேரேடு மற்றும் வங்கி புத்தகம் ஆகியவற்றோடு தவறாது கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் ம.ரவிகுமார் தெரிவித்து உள்ளார்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply