Breaking News

சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவக்கம் களக்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா?பயணிகள் எதிர்பார்ப்பு

ஜூலை 20, 2015

சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவக்கம்

களக்காடு, : சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவங்கப்பட்டுள்ளதால் களக்காடு வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கப்படுமா? என்று பயணிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.களக்காடு வழித்தடத்தில் வள்ளியூர், பாபநாசம், தென்காசி, புளியங்குடி, நாகர்கோவில் டெப்போக்களை சேர்ந்த அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும் பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப போதுமான பஸ்கள் இயக்கப்படவில்லை என்பதே பயணிகளின் புகாராக உள்ளது.நாகர்கோவில் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இல்லாததால், குறிப்பிட்ட நேரங்களில் களக்காடு பஸ் நிலையத்தில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும், கடந்த சில ஆண்டுகளாக இந்த வழித்தடத்தில் ஓடிய பஸ்கள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்தப்பட்டுள்ளன.

சங்கரன்கோவிலில் இருந்து நாகர்கோவிலுக்கு களக்காடு வழியாக இயங்கிய பஸ், பாபநாசத்தில் இருந்து களக்காடு, ராஜபுதூர், பணகுடி, நாகர்கோவில் வழியாக திங்கள்சந்தைக்கு இயங்கிய பஸ், களக்காட்டில் இருந்து நெல்லை சந்திப்புக்கு கிராமப்புறங்கள் வழியாக சென்ற பஸ், பாபநாசத்தில் இருந்து திசையன்விளைக்கு சென்ற பஸ் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளவற்றில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.இதனால் களக்காட்டில் இருந்து சங்கரன்கோவில், நெல்லை சந்திப்பு, திங்கள்சந்தை, திசையன்விளை போன்ற ஊர்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. எனவே பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது சேரன்மகாதேவியில் புதிய டெப்போ துவங்கப்பட்டுள்ளது. இதனால் நிறுத்தப்பட்டுள்ள சங்கரன்கோவில், திசையன்விளை, நெல்லை சந்திப்பு, திங்கள்சந்தைக்கு இயங்கிய பஸ்களையும், களக்காட்டில் இருந்து மதுரை, திருச்செந்தூர், ஆலங்குளம், சென்னைக்கும் பஸ்கள் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோல களக்காடு வழித்தடத்தில் நாகர்கோவிலுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும், சேரன்மகாதேவி, கரிசல், சடையமான்குளம், அப்பர்குளம், பாணாங்குளம், நாங்குநேரி வழியாக நாகர்கோவிலுக்கு கிராமங்களை இணைக்கும் வகையில் பஸ்கள் இயக்க வேண்டும் என்றும் கீழக்காடுவெட்டி பஞ்சாயத்து தலைவர் அப்பாத்துரை அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply