Breaking News

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது லாரி, ஜேசிபி பறிமுதல்

திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் கடத்திய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மினி லாரிகள், ஒரு ஜேசிபி இயந்திரம் பறிமுதல் செய்யப்பட்டது. திசையன்விளை அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் சிலர் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து திசையன்விளை இன்ஸ்பெக்டர் டேவிட் ரவிராஜன், எஸ்.ஐ.மதிபாலன் மற்றும் போலீசார் நம்பியாற்றில் திடீர் சோதனை நடத்தினர்.

thisayanvilai.com_nambiyaru_sand

இதில் அங்கு மணல் திருட்டில் ஈடுபட்ட அணைக்கரையை சேர்ந்த எட்வின்(29), வேலு(54), சுடலைக்கண்(46), தத்துவநேரியை சேர்ந்த முத்துக்குமார்30), சின்னத்துரை(25), முடவன்குளம் பெவின்(23), சூடுஉயர்ந்தான்விளையை சேர்ந்த ராமச்சந்திரன்(26), கன்னிமுத்து(21), பெட்டைக்குளம் மணிகண்டன்(27) ஆகியோரை கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்திய கூடன்குளம் மாடசாமிக்கு சொந்தமான ஜேசிபி இயந்திரம் மற்றும் சூடுஉயர்ந்தான்விளை ராமச்சந்திரனுக்கு சொந்தமான 2 மினிலாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

நன்றி: தினகரன்

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply