Breaking News

திசையன்விளையில் 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திசையன்விளை நகர பஞ்சாயத்து 16-வது வார்டு கீரைக்காரன்தட்டு, 17-வது வார்டு சண்முகபுரம் ஆகிய இடங்களில் தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா நடந்தது. நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், ராதாபுரம் தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

825-persons-in-Thisayanvilai-free-mixer-grinder-fan-rayappan_mla_thisyanvilai.com

எஸ்.மைக்கேல் ராயப்பன் எம்.எல்.ஏ., 16, 17-வது ஆகிய வார்டுகளைச் சேர்ந்த 825 பேருக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறிகளை வழங்கினார்.

சிறப்பு துணை தாசில்தார் வர்கிஸ், கிராம நிர்வாக அதிகாரி சத்தியவாணி, ஒன்றிய மாணவர் அணி செயலாளர் தயாளக்கண்ணன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ஜெயபால், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பேச்சிமுத்து, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத்தலைவர் பாலன், கவுன்சிலர்கள் இசக்கி, செந்தில், குமாரபலவேசம், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் முகமது அலி, ஜேம்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினத்தந்தி

About ragavan

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply