Breaking News

திசையன்விளை அருகே காட்டுப்பகுதியில் பலாத்காரம் செய்து இளம்பெண் கொலை? அழுகிய நிலையில் உடல் மீட்பு

திசையன்விளை: திசையன்விளை அருகே காட்டுப் பகுதியில் இளம்பெண் பிணமாக கிடந்தார். பாலியல் பலாத்காரம் செய்து அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. அழுகிய நிலையில் கிடந்த அவரது உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம், திசையன்விளையை அடுத்துள்ளது அப்புவிளை கிராமம். இந்த ஊரின் ஒதுக்குப்புறத்தில் கிராமச் சாலையில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் முருங்கைத் தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தின் சொந்தக்காரர் பராமரிப்பு பணிக்காக நேற்று மாலை 5 மணிக்கு சென்றார். அப்போது தோட்டத்தின் அருகேயுள்ள காட்டுப் பகுதியில் இருந்து துர்நாற்றம் வீசியது.

அங்கு சென்று பார்த்த போது அங்குள்ள பனைமரத்தின் கீழ் சுமார் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் உடலில் ஆடைகள் விலகி அழுகிய நிலையில் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை பார்வையிட்டனர். அவரை மர்ம நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இளம்பெண்ணின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததால் இச்சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் இருக்கும் எனத் தெரிகிறது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இங்கு வந்தார்? அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்றவர்கள் யார்? என்ற விவரம் எதுவும் உடனடியாக தெரியவரவில்லை. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்த போலீசார், இதுகுறித்து வழக்குப் பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி : தினகரன்

About Eesu

Check Also

வி.வி மினரல்ஸ் நிறுவனம் ரூ.800 கோடி வரி ஏய்ப்பு – வருமான வரித்துறை

நெல்லை மாவட்டம், திசையன்விளை அருகேயுள்ள கீரைக்காரன்தட்டு கிராமத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிவரும் வி.வி மினரல்ஸ் நிறுவனம் தாது மணல் ஏற்றுமதி, …

Leave a Reply