Breaking News

Recent Posts

பெண்ணிடம் நகைப் பறிப்பு

திசையன்விளை அருகே ஆனைகுடி கிராமத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மனைவி சாந்தகுமாரி (40).  இவர்,  தனது வீட்டின் முன் பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார்.  வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொருள் வாங்குவது போல் நடித்து சாந்தகுமாரியின்  கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.   நன்றி: தினமணி

Read More »

‘தொழிலதிபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை’ – நெல்லையில் சோகம்!

நெல்லையில் டாஸ்பாக் பார் உரிமையாளர் ஒருவர் குடும்ப பிரச்னை காரணமாக துப்பாகியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள நாலாந்தலை கிராமத்தைச் சேர்ந்தவர், துரைப்பாண்டியன். 55 வயது நிரம்பிய இவர் கடந்த 25 வருடங்களுக்கு முன்பே தொழில் வாய்ப்புக்காக சென்னைக்குச் சென்று விட்டார். அங்கு ரியல் எஸ்டேட் மற்றும் பணம் …

Read More »

திருவனந்தபுரம் – ஆற்றங்கரை பேருந்து வழித்தடத்தை திசையன்விளை வரை நீட்டிக்க கோரிக்கை

திருவனந்தபுரத்திலிருந்து ஆற்றங்கரை வரை இயக்கப்படும் பேருந்தை திசையன்விளை வரை நீட்டித்து இயக்க தமிழக – கேரள முதல்வர்களுக்கு திசையன்விளை பயணிகள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. திசையன்விளை பயணிகள் நலச் சங்கம் சார்பில், அதன் தலைவர் சாலமோன் ஜவஹர், செயலர் பிரைட், பொருளாளர் வசந்தன் ஆகியோர் தமிழகம் மற்றும் கேரள மாநில முதல்வர்கள், போக்குவரத்து துறை அமைச்சர்கள், ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் ஐ.எஸ். இன்பதுரை ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பியுள்ளனர். அதில், …

Read More »

ராதாபுரம் அருகே தேங்காய் நார் தொழிற்கூடத்தில் தீ விபத்து

ராதாபுரம் அருகேயுள்ள தனியாருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்கூடத்தில் வியாழக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. ராதாபுரத்தில் இருந்து சமூகரெங்கபுரம் செல்லும் சாலையோரத்தில் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருக்குச் சொந்தமான தேங்காய் நார் தொழிற்கூடம் அமைந்துள்ளது. இந்த தொழிற்கூடத்தில் தேங்காய் நெட்டில் இருந்து துப்பு தயாரித்து பொள்ளாச்சி பகுதிக்கு அனுப்பி வருகின்றனராம். இந்த தொழிற்கூடத்தில் சமூகரெங்கபுரத்தைச் சேர்ந்த சேர்மகனி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். வியாழக்கிழமை பிற்பகல் இந்த தொழிற்கூடத்தில் வெல்டிங் வேலை …

Read More »

பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு சலுகை

பிஎஸ்என்எல் செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிஎஸ்என்எல், திருநெல்வேலி தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் ப. முருகானந்தம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பிஎஸ்என்எல் 2ஜி, 3ஜி பிரீபெய்டு செல்லிடப்பேசி வாடிக்கையாளர்களுக்கு இம்மாதம் 10ஆம் தேதி வரை ரூ. 510-க்கு சி-டாப்அப், வெப் போர்டல் மூலம் செய்யப்படும் டாப்அப்-களுக்கு ரூ. 550 எஸ்ட்ரா டாக்டைம் வழங்கப்படுகிறது. பொதுமக்கள் வசதிக்காக புதிய தரைவழி இணைப்புத் திட்டத்தை உலடஉதஐஉசஇஉ (கக)-49 என்ற பெயரில் ரூ. 49 …

Read More »